தள்ளிப்போனது பிரபாஸ்-ன் சாஹோ ரிலீஸ்... அஜித், ஜெயம் ரவி படக்குழு ஹேப்பி!

சாஹோ திரைப்படம் ஆகஸ்ட் 30ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: பிரபாஸ் நடித்துள்ள சாஹோ திரைப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாகுபலி படத்துக்கு பிறகு பிரபாஸ் நடித்துள்ள சாஹோ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு, தமிழ், இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் ரிலீசாகிறது. இந்த திரைப்படத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட முதலில் திட்டமிடப்பட்டது.

‘Saaho’ release date shifted to August 30: Ajith movie team happy

இந்நிலையில், தற்போது ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தாமதமாவதால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "நாங்கள் பார்வையாளர்களுக்கு சிறந்த படத்தை கொடுக்க விரும்புகிறோம். சண்டைக் காட்சிகளில் நேர்த்தியைக் கொண்டு வருவதற்கு நமக்கு இன்னும் சிறிது நேரம் தேவைப்படுகிறது. நாங்கள் சுதந்திர தினத்திலிருந்து தேதியை மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றாலும், சாஹோவுடன் சுதந்திர தின மாதம் மற்றும் தேசபக்தி இணைந்திருக்க விரும்புகிறோம் " என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாஹோ படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக ஸ்ரத்தா கபூர் நடித்துள்ளார். ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, சங்கி பாண்டே, மகேஷ் மஞ்ச்ரேகர், அருண் விஜய், முரளசர்மா என உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் வரும் 8ம் தேதி ரிலீசாகிறது. சாஹோ திரைப்படம் அதற்கு அடுத்த வாரமே (ஆகஸ்ட் 15) ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டிருந்ததால், தியேட்டர்கள் பிளாக் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டது. அதேபோல் ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படமும் ஆகஸ்ட் 15ம் தேதி தான் ரிலீசாக உள்ளன. இந்நிலையில் சாஹோ திரைப்படத்தின் வெளியீடு 15 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், அஜித் மற்றும் ஜெயம் ரவி படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X