காப்பி அடிப்பதற்கும் ஒரு அளவே இல்லையா?: சாஹோ குழுவை விளாசிய பிரபல நடிகை
மும்பை: பிரபாஸின் சாஹோ பட பாடலில் பெங்களூரை சேர்ந்த கலைஞரின் ஓவியம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள சாஹோ படம் ரொம்பவே சுமார் என்று விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் பிரபாஸ், ஷ்ரத்தா வரும் பேபி வோன்ட் யூ டெல் மி பாடலில் வரும் ஒரு குறிப்பிட்ட செட் பெங்களூரை சேர்ந்த ஷிலோ ஷிவ் சுலேமானின் படைப்பில் இருந்து காப்பியடித்தது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாலிவுட் நடிகை லிசா ரே சாஹோ குழுவை விளாசி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுள்ளார். அடுத்தவர்களின் படைப்பை இப்படித்தான் அப்பட்டமாக காப்பியடிப்பதா என்று கேட்டு அவர் பெரிய போஸ்ட் போட்டுள்ளார். இது அப்பட்டமான திருட்டு, இன்ஸ்பிரேஷன் என்று கூற முடியாது என்று கொந்தளித்துள்ளார் லிசா ரே.
இந்நிலையில் ஷிலோவும் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு சாஹோ படக்குழு செய்த காரியத்தை அம்பலப்படுத்தியுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் ரூ. 350 கோடி செலவு செய்த தயாரிப்பாளர் ஷிலோவின் அனுமதி பெற்று அவரின் படைப்பை பயன்படுத்தியிருக்கலாமே. இந்த அளவுக்கு சீப்பாக நடந்து கொள்ளத் தேவையில்லை என்று விமர்சித்துள்ளனர்.
முன்னதாக பிரபாஸ் வெளியிட்ட சாஹோ போஸ்டரில் அவரும், ஷ்ரத்தாவும் கொடுத்த போஸ் நடிகர் ரன்பிர் கபூரும், ஐஸ்வர்யா ராய் பச்சனும் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு கொடுத்த போஸில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு முன்பு வெளியான சாஹோ போஸ்டர்களை பார்த்தவர்கள் ஹாலிவுட் படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டதாக தெரிவித்ததோடு ஆதாரத்தையும் வெளியிட்டனர்.
சாஹோ படம் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் இப்படி பிரச்சனை மேல் பிரச்சனையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. பெரிய பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள் இப்படித் தான் காப்பியடிப்பதா என்று சில பிரபலங்களும், சமூக வலைதளவாசிகளும் விளாசியுள்ளனர்.
சாஹோ படத்தை பார்த்தவர்களில் பலர் அதை கலாய்த்து சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











