அடேங்கப்பா, அட்லீக்கு மேல் இருக்கிறாரே பிரபாஸ் பட இயக்குனர்
ஹைதராபாத்: சாஹோ படத்தில் பிரபாஸின் லுக் கசிந்துவிடாமல் இருக்க படக்குழு ஒரு காரியம் செய்துள்ளது.
பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. சுஜீத் இயக்கி வரும் படத்தில் ஷ்ரத்தா கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்திற்காக பிரபாஸ் உடல் எடையை குறைத்து புது கெட்டப்பிற்கு மாறியுள்ளார்.
அந்த கெட்டப் கசிந்துவிடாமல் பாதுகாக்குகிறது படக்குழு.

லுக்
பிரபாஸின் லுக்கை படுரகசியமாக வைத்துள்ளனர். டீஸரில் கூட அவர் மாஸ்க் போட்டபடி இருந்தார். அதனால் அவரின் லுக் சரியாக தெரியவில்லை.

உத்தரவு
ஷூட்டிங்ஸ்பாட்டில் இருந்து பிரபாஸின் லுக் கசிந்துவிடாமல் இருக்க படக்குழுவினர் யாரும் செட்டுக்குள் செல்போனை எடுத்து வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு
ஷூட்டிங்ஸ்பாட்டில் பிரபாஸுக்காக பல வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவருடைய காட்சி முடிந்த பிறகு அவரை ஏதாவது ஒரு வாகனத்தில் அமர வைக்கிறார்கள். ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு படக்குழு அபுதாபி செல்கிறது.

ஹாலிவுட்
சாஹோ டீஸர் வெளியானபோது அதை ஹாலிவுட்டில் இருந்து அப்படியே காப்பியடித்துள்ளனர் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











