Saaho Trailer: ஹாலிவுட் தரம்.. சிக்சர் அடிக்கும் பிரபாஸ்.. பாராட்டு மழையில் நனையும் சாஹோ டிரெய்லர்!

சாஹோ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

சென்னை: பிரபாஸ் நடிக்கும் சாஹோ திரைப்படத்தின் டிரெய்லரை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போய்யுள்ளனர்.

பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் சாஹோ. தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் சாஹோ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 300 கோடி ரூபாய் செலவில், மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

சுஜித் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரபாஸ்க்கு வில்லனாக அருண் விஜய் நடித்துள்ளார். ஸ்ரத்தா, மந்திரா பேடி, ஜாக்கி ஷரோப், நீல் நிதின் முகேஷ், உள்ளிட்டோரும் சாஹோ படத்தில் நடித்துள்ளனர்

டிரெண்டிங்கான டிரெய்லர்

டிரெண்டிங்கான டிரெய்லர்

இப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகியுள்ளது. சுமார் அரை அணி நேரத்திற்கு எல்லாம் உலக அளவில் டிரெண்டிங்காகி இருக்கிறது. தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழி டிரெய்லர்களையும் பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

சிக்சர் அடிக்கும் பிரபாஸ்

சாஹோ டிரெய்லர் குறித்து பலரும் தங்களுடையே கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். "பிரபாஸ் சிக்சர் அடித்து ஸ்டேடியத்துக்கு வெளியே பந்தை பறக்கவிடுவார். பாகுபலிக்கு பிறகு பிரபாஸிடம் இருந்து மீண்டும் ஒரு ஹாலிட்வுட் தரத்திலான படம். சுஜித் ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஒரு படத்தை கொடுத்துள்ளார்" என ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுஜித்துக்கு பாராட்டு

சுஜித்துக்கு பாராட்டு

"சுஜித்தும் ஒரு பிரபாஸ் ரசிகர். எனவே தீவிர பிரபாஸ் ரசிகர்களுக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக தந்திருக்கிறார். நன்றி சுஜித்", என இவர் குறிப்பிட்டுள்ளார்.

வில்லன் சங்கி பாண்டே

"சாஹோ டிரெய்லரில் சங்கி பாண்டேவை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி. அவரை வில்லனாக பார்க்க காத்திருக்கிறோம்" என இவர் தெரிவித்துள்ளார்.

உடைந்த எதிர்பார்ப்பு

"சாஹோ படம் குறித்த எதிர்பார்ப்பு கேஜிஎப் யஷ் ரேஞ்சுக்கு இருந்தது. ஆனால் உண்மை என்னவெனில் தீப்பெட்டி கணேசன் அளவுக்கு தான் அவுட்புட் உள்ளது" என இவர் காலாய்த்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X