Saaho: தரமான ஆக்ஷன் காட்சிகள்.. தெறிக்கவிடும் க்ளைமாக்ஸ்.. பிளாக்பஸ்டர்.. சாஹோ டிவிட்டர் விமர்சனம்!
சாஹோ படத்தின் அதிகாலை காட்சியை பார்த்த ரசிகர்கள், படத்தை பாராட்டி வருகின்றனர்.
Recommended Video
சென்னை: சாஹோ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் சாஹோ. பாகுபலி பிரமாண்ட வெற்றிக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் என்பதால் சாஹோ படம் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் இப்படமும் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
சாஹோ திரைப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ் என மூன்று மொழிகளில் இன்று ரிலீசாகியுள்ளது. இப்படத்தின் அதிகாலை காட்சியை பார்த்த ரசிகர்கள், படம் குறித்த தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.
பிளாக்பஸ்டர்
"சாஹோ பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் - பிளாக்பஸ்டர். இளம் இயக்குனர் சுஜீத்துக்கு வாழ்த்துகள். இந்திய சினிமாவில் இதுவரை பார்த்திராத சிறந்த ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது. ஜிப்ரானின் பின்னணி இசையும், விஷுவல்சும் அட்டகாசம். விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் திருப்பங்கள் நிறைந்திருக்கின்றன. க்ளைமாக்ஸ் 30 நிமிட காட்சிகள் புல்லரிக்க வைக்கிறது", என பாராட்டியுள்ளார் இவர்.
அடுத்த லெவல்
" சாஹோ படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட். இந்திய சினிமாவில் இதற்கு முன்பு இப்படி ஒரு படம் வந்ததில்லை. தெலுங்கு சினிமாவை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றிருக்கிறார்கள்", என குறிப்பிட்டுள்ளார் இவர்.
கொன்னுட்டீங்க ஸ்ரத்தா
" சாஹோ பார்த்துவிட்டேன். அடக்கடவுளே.. உண்மையில் அற்புதமான படம். சாஹோ நிச்சயம் பிளாக்பஸ்டர் தான். பாராட்ட வார்த்தைகளே இல்லை. தனித்துவமான படம். ஸ்ரத்தா கபூர் கொன்னுட்டீங்க போங்க. பிரபாஸ் மீதிருந்து பார்வையை விலக்க முடியவில்லை. சூப்பர் படம்", என இந்த ரசிகர் பாராட்டியுள்ளார்.
தெறிக்கவிடும் க்ளைமாக்ஸ்
"வாழ்த்துகள் பிரபாஸ் காரு. பிரபாஸ் ஸ்கிரீன் பிரசன்ஸ் அற்புதம். பிரபாஸ் மற்றும் ஸ்ரத்தா சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பவர்புல்லான விஷுவல்ஸ். இடைவேளை காட்சி மற்றும் க்ளைமாக்ஸ் தெறிக்கவிடுது", என கூறியுள்ளார் இவர்.


Click it and Unblock the Notifications











