சாஹோ அப்டேட்: இன்று ட்ரெயிலர் - ஆகஸ்ட் 30ல் உலகம் முழுக்க பட்டையை கிளப்ப வரும் பிரபாஸ்
சென்னை: பிரபாஸ் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் சாஹோ திரைப்படத்தின் ட்ரெயிலர் இன்று ரிலீஸ் ஆகிறது. ஆகஸ்ட் 30ஆம் தேதி உலகம் முழுக்க படம் ரிலீஸ் ஆகும் என யுவி கிரியேசன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
பாகுபலி நாயகன் பிரபாஸ் நடித்துள்ள பிரம்மாண்ட படம் சாஹோ. 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தை யுவி கிரியேசன் மற்றும் டி. சீரிஸ் தயாரித்துள்ளனர். இந்த படத்தை சுஜித் இயக்கியிருக்கிறார். பிரபாஸ் உடன் ஜோடியாக ஸ்ரத்தா கபூர் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் மந்திரா பேடி, ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், அருண் விஜய் உள்ளிட்டோரும் சாஹோ படத்தில் நடித்துள்ளனர் இப்படம் மூலம் பிரபாஸ் ஹிந்தியிலும், ஷ்ரத்தா கபூர் தென்னிந்திய சினிமாவிலும் அறிமுகமாகின்றனர்.

பிரபாஸ் பட்டையை கிளப்பப் போகும் இந்தப்படத்தில் மூன்று வில்லன்களுடன் மோதப்போகிறராம் பிரபாஸ். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் என 4 மொழிகளில் சாஹோ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பாகுபலி இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் பிரபாஸ் நடிக்கும் பெரிய பட்ஜெட் படம் என்பதால் அவரது ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











