சாஹோ சர்ப்ரைஸ்: மனம் மயக்கும் பாடல்கள்... கவித்துவமான காட்சிகள் - மதன் கார்க்கி #sahoo

Recommended Video

Saaho Songs:மனம் மயக்கும் பாடல்கள்

சென்னை: பத்துவிதமான லொக்கேசன்களில் படமாக்கப்பட்ட பாடல் காட்சிகள் மனதை மயக்கும் கண்களுக்கு இதம் தரும் என்று சாஹோ படத்தில் பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் பற்றியும் அதற்காக ஒவ்வொரு வரிகளும் எழுதப்பட்ட விதம் பற்றியும் பகிர்ந்து கொண்டார் பாடலாசிரியர் மதன் கார்க்கி. ஒவ்வொரு வரிக்கும் கவித்துவமாக காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அதற்காக இயக்குநர் சுஜீத்திற்கு நன்றி கூறுவதாகவும் தெரிவித்தார் மதன் கார்க்கி.

பாகுபலி படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகியுள்ள சாஹோ படத்தை சுஜீத் எழுதி இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 Saaho update: Team launched fourth Song in Chennai

படத்திற்கான புரமோசன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் பிரஸ் மீட் சென்னையில் நடந்த போதே பிரபாஸ் விரைவில் ஒரு சர்ப்ரைஸ் தருவார் என்று கூறியிருந்தனர். நேற்று சென்னையில் அந்த சர்ப்ரைஸ் என்னவென்று தெரியவந்தது. மிக பிரம்மாண்டமான பாடல் ஒன்றின் ஒன்றரை நிமிட வீடியோ வெளியிடப்பட்டது.

சாஹோ படத்தில் மூன்று பாடல்களை மதன் கார்க்கியும் ஒரு பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவனும் எழுதியுள்ளனர். ஏற்கனவே காதல் சைகோ, மழையும் தீயும் பாடல்கள் யு டுயூப்பில் ரிலீஸ் ஆகிவிட்டன. விக்னேஷ் சிவன் எழுதிய பேட் பாய் பாடலும் ரிலீஸ் ஆகிவிட்டது.

10 விதமான லொக்கேசன்களில் படமாக்கப்பட்ட பாடல் ஒன்றின் ஒன்றரை நிமிட வீடியோவை வெளியிட்டனர். அந்த பாடல் படமாக்கப்பட்ட விதம் பற்றிதான் உருகிப் போய் பேசினார் மதன் கார்க்கி. பாகுபலி படத்தில் இருந்து பிரபாஸ் உடனான நட்பை பகிர்ந்து கொண்ட அவர், இயக்குநர் சுஜீத் அடுத்த படத்தில் 5 பாடல்களை வைத்து தனக்கு எழுத வாய்ப்பு தர வேண்டும் என்றார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசும் போது ஹாலிவுட் தரம் எல்லாம் நாமளும் பண்ணமுடியும் அப்படின்னு சொல்றமாதிரி இந்த ட்ரெயிலர்ல கொண்டு வந்திருக்காங்க. பெரிய கனவுகள் எல்லாமே பெரிய தயாரிப்பாளர் கிடைத்தால் சாத்தியமாகும் என்றார்.

இயக்குநர் சுஜீத் பேசும் போது என்மேல உள்ள நம்பிக்கையில தயாரிப்பாளர்கள் எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்தாங்க. கதையை நான் சொன்னேன். நம்பி இதை எடுத்தாங்க. ஆறு வருஷத்துக்கு முன்னாடி இந்த மாதிரி ஒரு படம் எடுப்பேன்னு நினைக்கலை. பிரபாஸ் உடனான எக்ஸ்பீரியன்ஸ் சொல்றது கஷ்டம். எப்ப பார்த்தாலும் பிரபாஸ் கூடத்தான் இருப்பேன். ஐந்து வருஷம் பிரபாஸ் உடன்தான் போனது என்றார்.

படத்தில் பாடல் காட்சிகள் ரொம்ப முக்கியம். மதன் கார்க்கி எழுதியது பற்றி என்னோட நண்பர்கள் எனக்கு விளக்கினாங்க. ஒவ்வொரு லிரிக்ஸ்சும் ஒரு கவிதை. விக்னேஷ் சிவன் எனக்கு அண்ணன் மாதிரி. அவர் பாட்டு எழுதியது எனக்கு பிடிக்கும். பேட் பாய்ஸ் எழுத சொன்னேன். நல்ல பாட்டு. அதே போல உண்மை எது பொய் எது பாடலும் இந்த படத்திற்கு ஆத்மா மாதிரி என்றார்.

பிரபாஸ் பேசும் போது பாடல்கள் எழுதிய மதன் கார்க்கி, விக்னேஸ் சிவனுக்கு நன்றி சொன்னார். இன்டர்நேசனல் இயக்குநர் சுஜீத்திற்கும் நன்றி சொன்னார். ஒரு பாடலுக்காக ஆறு மாதம் ரியல் லொக்கேசன்ஸ் போய் படம் எடுத்திருக்கிறோம் என்றார். இயற்கையான இடங்களை நீங்க பார்த்து ரசிக்கலாம் என்றும் சொன்னார். வரும் 30ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது சாஹோ.

500 தியேட்டர்களில் வெளியாக உள்ளது சாஹோ. இதற்காக பல படங்களின் ரிலீஸை கூட ஒத்தி வைத்துள்ளனர். ஷ்ரத்தா கபூர் இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, அருண் விஜய், ஈவ்லின் சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X