ராமராஜனோட வேல்யூ இப்போ இத்தனை கோடி.. சீனு ராமசாமி சொன்னாரு.. ஹீரோவான சாமானியன் தயாரிப்பாளர் பேச்சு!
சென்னை: நடிகர் ராமராஜனை வைத்து சாமானியன் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மதியழகன் அடுத்ததாக கதாநாயகனாக நடித்துள்ள பிதா திரைப்படம் விரைவில் வெளியாக காத்திருக்கிறது. அந்த படத்தின் நிகழ்ச்சியில் பேசிய மதியழகன் ஆப்பரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெத் என சமீபத்தில் தனது தயாரிப்பில் வெளியான சாமானியன் படத்தின் வசூல் குறித்து வருத்தத்துடன் பேசியிருந்தார்.
பிதா படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்று படத்தை தயாரிப்பாளரும் ஹீரோவான மதியழகன் பற்றி பல விஷயங்களை பேசினர்.

எட்செட்ரா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் வி. மதியழகன் திலகர், அப்பா, செம போதை ஆகாதே, ராஜா மந்திரி, காதல் கசக்குதய்யா, கொலையுதிர் காலம், தேவதாஸ் பிரதர்ஸ், கள்ளன், மஹா, பாக்ஸர் மற்றும் சாமானியன் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.
சாமானியன்: ராஹேஷ் இயக்கத்தில் ராமராஜன், ராதா ரவி, எம். எஸ். பாஸ்கர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்து இளையராஜா இசையில் வெளியான சாமானியன் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக அந்த படத்தை தயாரித்த மதியழகன் ஹீரோவாக நடிக்கும் படத்தின் அறிமுக விழா நேற்று நடைபெற்றது.
அருண் விஜய்க்கு வில்லன்: ஏற்கனவே அருண் விஜய் நடிப்பில் உருவான பாக்ஸர் படத்தில் அவருக்கு வில்லனாக மதியழகன் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அந்த படம் பல ஆண்டுகளாக வெளியாகாமல் தயாரிப்பு நிலையிலேயே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது மதியழகன் ஹீரோவாக மாறியுள்ளார்.

ராமராஜன் வேல்யூ: பிதா படத்தின் மூலம் மதியழகன் ஹீரோவாக மாறியுள்ள நிலையில், நேற்று நடைபெற்ற விழாவில் பேசும் போது ஆப்பரேஷன் சக்சஸ் ஆனால், பேஷண்ட் மரணம் என்கிற நிலைமை தான் சாமானியன் படத்துக்கு ஆனது என்று கூறினார். உங்களை நம்பித்தான் ஹீரோவாக மாறுகிறேன் கைவிட்டு விடாதீர்கள் என்றும் கேட்டுக் கொண்டார். சமீபத்தில் சீனு ராமசாமியை சந்தித்தேன் அவர் என்னை பார்த்து பரவாயில்லையே ஒரு 3 கோடிக்கு தேறுர ஆளாக ராமராஜன் சாரை இறக்கிட்டீங்களே என்று பாராட்டினார் என வெளிப்படையாக பேசினார்.
அதிக சம்பளம் கேக்குறாங்க : இளம் ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் மூன்று நாட்கள் கூட ஓடுவதில்லை. ஆனால், கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கின்றனர். அதை சமாளிக்க முடியாமலே இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் சினிமா மீதுள்ள ஆர்வத்தால் ஹீரோக்களாக மாறும் சூழல் உருவாகியுள்ளது என்றும் பேசியுள்ளார். இந்த படத்தின் கதை நிச்சயம் ரசிகர்களை கவரும் என்றும் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் மேலும், பல விஷயங்களை பேசலாம் என்றும் கூறினார்.


Click it and Unblock the Notifications











