நோ செக்ஸ் காட்சி... இது முழுக்க குடும்பப் படம்!- 'கங்காரு' சாமி
நோ செக்ஸ் காட்சி... இது முழுக்க குடும்பப் படம்!- 'கங்காரு' சாமி
சென்னை: 'மிருகம்', 'உயிர்', 'சிந்து சமவெளி' போன்ற கான்ட்ராவர்சி படங்களால் சர்ச்சைக்குரிய இயக்குநராகப் பார்க்கப்பட்ட சாமி, முதல் முறையாக ஒரு விரசக் காட்சி கூட இல்லாமல் இயக்கும் புதிய படம் கங்காரு,
இந்தப் படம் எண்பது சதவீதம் முடிந்துவிட்டது. முழுக்க முழுக்க கொடைக்கானல் மலையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

அமைதிப்படை 2
அமைதிப்படை - 2 படத்தை தயாரித்த வி - ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இதில் புதுமுக நாயகனாக அர்ஜுனா நடிக்கிறார். வர்ஷா அஸ்வதி நாயகியாக நடிக்கிறார். தங்கை கேரெக்டரில் பிரியங்கா, தம்பி ராமையா, கலாபவன் மணி, ஆர். சுந்தரராஜன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

வைரமுத்து
பின்னணி பாடகர் ஸ்ரீநிவாஸ் முதல் முறையாக இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அனைத்துப் பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். கொடைக்கானலில் ஒரு மலை உச்சியில், இப்படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போட்டு அசத்தியுள்ளார்கள். திரைக்கதை அமைத்து வசனம் எழுதி இயக்குகிறார் சாமி. ராஜரத்தினம் ஒளிப்பதிவு செய்கிறார்

சுரேஷ் காமாட்சி
'கங்காரு' படம் பற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறுகையில், "கதாநாயகன் தன் தங்கையை கங்காரு போல் கண்ணும் கருத்துமாக காப்பற்றுகிறார். தங்கை தன் அண்ணனை கங்காரு போல் காப்பாற்றுகிறாள். ஒரு கட்டத்திற்கு மேல் காதலி தன் காதலனை கங்காரு போல் காப்பாற்றுவார். அன்பை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை இது. எந்த வித செக்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளும் இல்லாமல் குடும்பத்தோடு உட்கார்ந்து ரசிக்கும் படமாகவும் இளைஞர்கள் ரசிக்கும்படியாக ஒரு அழகான காதலையும் மையப்படுத்தி இருப்பது எல்லா தரப்பினரையும் திருப்பதி படுத்தும் படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் சாமி," என்றார்.

வைரமுத்துவுக்கு பாராட்டு விழாவாக...
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கான பாராட்டு விழாவாக நடக்க உள்ளது. அக்டோபர் பதினான்காம் தேதி சென்னை டிரேட் சென்டரில் பிரமாண்டமாக நடக்கிறது.


Click it and Unblock the Notifications











