சாமி 2 படத்தில் நடிக்க இஷ்டமே இல்லை: குண்டை தூக்கிப் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்
Recommended Video
சென்னை: சாமி 2 படத்தில் நடிக்க விருப்பமில்லை என்று ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமி 2 படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தார். சாமி படத்தில் நடித்த த்ரிஷா தான் 2ம் பாகத்திலும் நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு அவர் படத்தில் இருந்து வெளியேறியதால் ஐஸ்வர்யா ராஜேஷை நடிக்க வைத்தார் ஹரி.
இந்நிலையில் சாமி 2 படத்தில் நடித்தது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

விருப்பம் இல்லை
எனக்கு சாமி 2 படத்தில் நடிக்க விருப்பமே இல்லை. என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டதால் நடிக்க ஒப்புக் கொண்டேன். முதல் பாகத்தில் த்ரிஷா நடித்த புவனா கதாபாத்திரத்தில் நடிக்க யாரும் விரும்பவில்லை.

இயக்குநர்கள்
கமர்ஷியல் படங்களில் இயக்குநர்களின் முதல் தேர்வு நான் இல்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் அதை பற்றி எனக்கு கவலை இல்லை. இரண்டு பாட்டுக்கு ஆடிவிட்டு, நான்கு காதல் காட்சிகளில் வரும் வழக்கம் எனக்கு பிடிக்கவில்லை என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

மாமி
சாமி பட மாமி என்றாலே அது த்ரிஷா தான் என்று ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்டது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் புவனா மாமி கதாபாத்திரத்தில் நடித்தது வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் தான் ஐஸ்வர்யா அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.

விஜய் தேவரகொண்டா
ஐஸ்வர்யா தற்போது சிவகார்த்திகேயனின் எஸ்.கே. 16 மற்றும் விஜய் தேவரகொண்டாவின் புதுப்படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஐஸ்வர்யா கதைக்கும், தனது கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பதால் தான் தொடர்ந்து நடிப்பில் வித்தியாசம் காட்ட முடிகிறது.


Click it and Unblock the Notifications











