Don't Miss!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Lifestyle இனிமே மாம்பழ தோலை தூக்கி எறியாம.. இப்படி டீ செஞ்சு குடிங்க.. இருமடங்கு நன்மை கிடைக்கும்...
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
‘நான் சாமி இல்ல பூதம்’... மிரட்டலாக வெளியான சாமி 2 டிரெய்லர்!
விக்ரம் நடித்துள்ள சாமி 2 படத்தின் டிரெய்லர் ரிலீசாகியுள்ளது.
Recommended Video
சென்னை: ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள சாமி 2 படத்தின் டிரெய்லர் ரிலீசாகியுள்ளது.
கடந்த 2003ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்து ரிலீசான படம் சாமி. த்ரிஷா, விவேக், ரமேஷ் கண்ணா எனப் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிகப் பெரிய ஹிட்.
அதன் தொடர்ச்சியாக மீண்டும் விக்ரம் - ஹரி கூட்டணியில் சாமி 2 படம் உருவானது. இப்படத்தில் திரிஷாவுடன் இன்னொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
போலீஸ்:
இந்நிலையில், இன்று அப்படத்தின் டிரெய்லர் ரிலீசாகியுள்ளது. சாமி முதல் பாகத்தைப் போலவே இப்படத்திலும் விக்ரம் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். முந்தைய பாகத்தைப் போலவே இதிலும் ஆக்சன் காட்சிகள் நிறைந்திருப்பது டிரெய்லர் மூலம் தெரிகிறது.
காமெடிக்கு சூரி:
இந்த படத்தில் வில்லனாக பாபி சிம்ஹா நடித்திருக்கிறார். எனவே, படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. முதல் பாகத்தில் காமெடி போர்ஷனுக்கு விவேக் நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் சூரி நடித்துள்ளார்.
அப்போ பொறுக்கி, இப்போ பூதம்:
முதல் பாகத்தில் ‘நான் போலீஸ் இல்ல பொறுக்கி' என்ற விக்ரமின் வசனம் பிரபலமானது. தற்போது இரண்டாம் பாகத்தில், ‘நான் சாமி இல்ல பூதம்' எனப் பேசி மிரள வைக்கிறார் விக்ரம். அதோடு, நான் தாய் வயித்துல பிறக்கல, பேய் வயித்துல பிறந்தேன்' என பஞ்சுகளை அள்ளி வீசுகிறார்.
ஆக்சன், காதல்:
ஏற்கனவே, சிங்கம் மற்றும் அதன் அடுத்த பாகங்களில் கிராபிக்ஸ் காட்சிகளால் மக்களை பயமுறுத்திய ஹரி, இதிலும் அதே மாயத்தைச் செய்துள்ளார். அது மட்டுமே கொஞ்சம் மிரள வைக்கிறது. மற்றபடி, ஹரி படங்களுக்கே உரித்தான ஆக்சன், காமெடி, காதல் எதற்கும் இப்படத்திலும் குறையிருக்காது என நம்பலாம்.
வரவேற்பு:
முதல் பாகம் வெளியாகி, 15 வருடங்களுக்குப் பிறகு உருவாகி இருக்கும் சாமி-2 படத்தின் டிரெய்லர் விக்ரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே 4.5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் டிரெய்லரை பார்த்து ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.