மிரட்டும் ஆறுச்சாமி: தெறிக்கும் சாமி 2 ட்ரெய்லர் #SaamySquare
சென்னை: சாமி ஸ்கொயர் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
2003ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை 15 ஆண்டுகள் கழித்து எடுத்துள்ளார் இயக்குனர் ஹரி. முதல் பாகத்தில் மாமியாக நடித்த த்ரிஷா இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

இதையடுத்து அவர் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷை நடிக்க வைத்துள்ளனர். மகன் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷன் நடித்துள்ளார். படம் அடுத்த வாரம் ரிலீஸாக உள்ள நிலையில் இன்று மாலை ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
ஹரி படத்தில் ஹீரோ ஹைபிட்ச்சில் பேசாமலா? விக்ரம் முதல் பாகத்தில் சொன்ன வசனத்துடன் ட்ரெய்லர் துவங்குகிறது. ரவுடிகளை அடித்து துவம்சம் செய்கிறார்.
கீர்த்தியும், ஐஸ்வ்ரயாவும் டூயட் பாடுகிறார்கள். வில்லன் சீற, பதிலுக்கு விக்ரம் குமுற ட்ரெய்லர் அட்டகாசமாக வந்துள்ளது. 15 ஆண்டுகளாகியும் ஆறுச்சாமி அப்படியே இளமையாகவே இருக்கிறாரே! இருக்கு சாமி ஸ்கொயர் படத்தில் செமத்தியான விருந்து இருக்கு.


Click it and Unblock the Notifications











