twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தூத்துக்குடிக்காக 'சாமி 2' ட்ரெய்லர் ரிலீஸ் ஒத்திவைப்பு: பயமா, பப்ளிசிட்டியா?

    By Siva
    |

    சென்னை: தூத்துக்குடியில் அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதால் சாமி 2 படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமி படத்தின் இரண்டாம் பாகம் 15 ஆண்டுகள் கழித்து எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்தார்.

    இரண்டாம் பாகத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார்.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி

    சாமி 2 படத்தின் ட்ரெய்லரை மே 26ம் தேதி வெளியிட முடிவு செய்தனர். ஆனால் தூத்துக்குடியில் அப்பாவி பொது மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதால் ட்ரெய்லர் ரிலீஸை தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தெரிவித்துள்ளார்.

    போலீஸ்

    போலீஸ்

    ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய மக்களை சுட்டுக் கொன்ற போலீசார் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் விக்ரம் போலீசாக நடித்துள்ள படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டால் நெகட்டிவ் பப்ளிசிட்டியாகிவிடும் என்று நினைத்திருப்பார்கள் போன்று என்று பேச்சு கிளம்பியுள்ளது.

    பாராட்டு

    பாராட்டு

    தூத்துக்குடி மக்களின் துக்கத்தில் பங்கெடுத்து ட்ரெய்லர் ரிலீஸை தள்ளிப் போட்டதற்கு நன்றி என்று சிலர் ஷிபு தமீன்ஸிடம் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

    படம்

    படம்

    படத்தில் விக்ரம் போலீஸ் உடையில் தூத்துக்குடியில் இருப்பது போன்று காட்சிகள் இருக்கலாம். இந்த நேரத்தில் அந்த ட்ரெய்லரை வெளியிட்டால் ஆபத்து என்று நினைத்திருப்பார்கள். மற்றபடி தூத்துக்குடி மக்களுக்காக பாவப்பட்டு எல்லாம் ட்ரெய்லர் வெளியீட்டை தள்ளி வைக்கவில்லை என்று சமூக வலைதளங்களில் பேசிக் கொள்கிறார்கள்.

    விளம்பரமா?

    விளம்பரமா?

    இது என்ன புது மாதிரி விளம்பரமா? அவ்வளவு அக்கறை இருந்தால் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை படங்களை வெளியிடாமல் இருக்க முடியுமா என்றும் சிலர் கேட்டுள்ளனர்.

    English summary
    Some people are appreciating the postponement of Saamy 2 trailer while some are accusing it as a publicity stunt.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X