Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சூர்யாவை தொடர்ந்து விக்ரமை சிலையாக்கிய ஹரி.. 'சாமி ஸ்கொயர்' மோஷன் போஸ்டர்!
Recommended Video
சென்னை : ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'சாமி ஸ்கொயர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விக்ரம், த்ரிஷா நடிப்பில், ஹரி இயக்கத்தில் 2003-ம் ஆண்டு வெளியாகி செம ஹிட்டான 'சாமி' படத்தின் இரண்டாம் பாகம், 'சாமி ஸ்கொயர்' என்ற பெயரில் தயாராகி வருகிறது. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க, பாபி சிம்ஹா வில்லனாக நடித்துள்ளார்.
இப்படத்தின் ஷூட்டிங் காரைக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்றது. தற்போது முக்கால்வாசிக்கும் மேல் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மோஷன் போஸ்டரில் விக்ரம் கற்சிலையைப் போல திருநெல்வேலி மைல்கல்லில் அமர்ந்திருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக கற்கள் உடைந்து விக்ரம் உயிர்பெறுவதாக இந்த மோஷன் போஸ்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளது.
Proudly presenting you all
— Thameens Films (@ThameensFilms) May 17, 2018
- THE FIRST LOOK MOTION POSTER of our prestigious project with #ChiyaanVikram sir and #DirectorHari sir - #SaamySquare #SaamySquareFirstLook 😊😊 @KeerthyOfficial @ThisIsDSP #BobbySimha 🙏🏼 🙏🏼 - @ShibuThameens https://t.co/6mZL1DBpAi
பரபர திரைக்கதைக்குப் பெயர்போன இயக்குநர் ஹரி தொடர்ந்து போலீஸ் ஸ்டோரிகளாக எடுத்து வருகிறார். சூர்யாவை வைத்து 'சிங்கம்' படத்தின் மூன்று பாகங்களை எடுத்த ஹரி, 'சாமி ஸ்கொயர்' படத்தில் 'சாமி' படத்தின் துடிப்பான போலீஸாக விக்ரமை காட்டுகிறார்.
சூர்யா, அனுஷ்கா ஆகியோர் நடித்த 'சிங்கம்' படத்தின் மூன்றாம் பாகமான 'சி 3' படத்தின் மோஷன் போஸ்டரில் சூர்யாவை வெண்கல சிலையைப் போல காட்டியிருந்தார் ஹரி. இப்போது விக்ரமை சிலைபோல ஆக்கியிருக்கிறார்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!