'சாமி 2' புதிய டிரெய்லர்... இதுல என்னலாகும் பண்ணிருக்காங்கன்னு தெரிஞ்சுக்குங்க!
சாமி 2 படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது.
சென்னை: ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள சாமி இரண்டாம் பாகத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது.
கடந்த 2003ம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டான சாமி படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி வெளியாகயுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை ஏற்கனவே வெளியிடப்பட்டு இணையத்தில் ஹிட்டானது.

சாமி 2 படத்தின் முதல் டிரெய்லர் ஒன்றரைக் கோடிக்கும் அதிகமானோர் பார்வையாளர்களை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது டிரெய்லரை படக்குழு இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டுள்ளது.
இந்த டிரெய்லரும் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது. இப்படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications