Don't Miss!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
மார்ச்-ல் ஓடிடியில் வெளியாகும் சாணி காயிதம்.. லேட்டஸ்ட் அப்டேட்!
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான ரோலில் நடித்துள்ள திரைப்படம் சாணி காயிதம்
இதுவரை இயக்குனராக இருந்த செல்வராகவன் முதல் முறையாக நடிகராக திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகிறார்
ராக்கி படத்தை தொடர்ந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்க இப்படம் மார்ச் மாதத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியாக இருப்பதாக புதிய தகவல் கிடைத்துள்ளது.
வலிமை படம் பார்க்க போறீங்களா...அப்போ உஷாரா இருங்க...ரசிகர்களை எச்சரிக்கும் பிரபல டைரக்டர்
தங்கை வேடங்களை
தென்னிந்தியாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து வந்த இவர் சமீபகாலமாக தங்கை வேடங்களையும் ஏற்று நடித்து வருகிறார். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்தார்.
சிரஞ்சீவிக்கு தங்கையாக
சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் முழுக்க முழுக்க குடும்ப பின்னணியில் உருவான இந்த படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார் இப்போது தெலுங்கில் சிரஞ்சீவிக்கு தங்கையாக போலோ சங்கர் என்ற படத்தில் நடித்து வருகிறார் இப்படம் தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற வேதாளம் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும்
சாணி காயிதம்
விக்னேஷ் சிவன் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ராவான கேங்க்ஸ்டர் திரைப்படம் ராக்கி . இப்படத்தை அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்தார் ராக்கி மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக சாணி காயிதம் என்ற படத்தை இயக்கி வருகிறார். ஆக்ஷன் திரில்லர் கதை களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகிறார். இயக்குனராக தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட ஒரு இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் செல்வராகவன் முதல் முறையாக நடிகராக அறிமுகமாகும் படம் என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
Recommended Video
மார்ச் மாதம் முதல் வாரம்
கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இந்த படத்தில் வழிப்பறிக் கொள்ளையர்களாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் முதல் திரைப்படம் என்பதால் இப்படம் திரையரங்கில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது என்ற தகவல் சில மாதங்களுக்கு முன்பே தெரிய வந்தது. இந்நிலையில் சாணி காகிதம் மார்ச் மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்ற லேட்டஸ்ட் தகவல் தற்போது கிடைத்துள்ளது.