சாணிக் காயிதம் படப்பிடிப்புக்கு திரும்பிய நடிகை கீர்த்தி சுரேஷ்... ஆத்தா நான் ஷூட்டிங்கு போறேன்!

சென்னை : பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் சாணிக் காயிதம் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

கீர்த்தி சுரேஷ்,செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார்.

தொடர் ஊரடங்கு காரணமாக தடைப்பட்டுவந்த படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டு கீர்த்தி சுரேஷ் சாணிக் காயிதம் படப்பிடிப்பில் கலந்துகொள்ளப் போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அப்பா சுரேஷ்குமார் தயாரிப்பில்

அப்பா சுரேஷ்குமார் தயாரிப்பில்

தமிழ்,மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து வருகிறார். மகாநடி, பெண் குயின், மிஸ் இந்தியா போன்ற படங்களைத் தொடர்ந்து குட்லக் சகி, வாஷி போன்ற படங்கள் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாக உள்ளது. இதில் வாஷி கீர்த்தி சுரேஷின் அப்பா சுரேஷ்குமார் தயாரிக்கிறார்.

செல்வராகவன் நடிகராக

செல்வராகவன் நடிகராக

தமிழில் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்துவரும் கீர்த்தி சுரேஷ் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம் படத்தில் வித்தியாசமான ரோலில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கும் ராக்கி விரைவில் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இதுவரை இயக்குனராக கொண்டாடப்பட்டு வந்த செல்வராகவன் இப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.

Recommended Video

தடுப்பூசி கண்டிப்பா போடுங்க | Actress Keerthy Suresh Awareness Video | Vaccine
விறுவிறு வேகத்தில்

விறுவிறு வேகத்தில்

பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட சாணிக் காயிதம் படப்பிடிப்பு விறுவிறு வேகத்தில் நடைபெற்று வந்தது. எதிர்பாராமல் கொரோனா இரண்டாவது அலை பரவியதால் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. சாணிக் காயிதம் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த சுவாரசியமான புகைப்படங்கள் சில வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்தது.

மீண்டும் சாணிக் காயிதம்

மீண்டும் சாணிக் காயிதம்

லாக் டவுனில் இருக்கும் போது கீர்த்தி சுரேஷ் சாணிக் காயிதம் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு ஷூட்டிங்கை மிஸ் செய்கிறேன் என பீல் பண்ணினார். இந்த நிலையில் பல மாதங்களுக்குப் பிறகு கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் செம குஷியான கீர்த்தி மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு சாணிக் காயிதம் படப்பிடிப்புக்கு மீண்டும் திரும்பியுள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆவலுடன் ஷூட்டிங் செல்லும் புத்துணர்ச்சியான வீடியோவையும் தற்பொழுது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X