இயக்குநர் பாலாவை நம்பினேன்.. ஓட்டல் கடையில் சாட்டை பட நடிகர்.. எமோஷனல் வீடியோ

சென்னை: சாட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில அறிமுகம் ஆனவர் யுவன். தமிழில் பல படங்களில் நடித்துக்கொண்டிருந்தவர் தொடர் தோல்வியால் திடீரென காணாமல் போனார். தற்போது அவரது வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது இந்த நிலைக்கு காரணம் தேசிய விருது வென்ற இயக்குநர்தான் எனவும், நடிகர்களை அடித்து துன்புறுத்தும் அந்த இயக்குநரை நம்பி நொந்து போனதாகவும் வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் அன்பழகன் இயக்கத்தில் வெளியான சாட்டை படத்தில் யுவன் நடிகராக அறிமுகம் ஆனார். இப்படத்தில் இளம் நாயகனாகவும் பழனிமுத்து என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் யுவனுக்கு பெரிய வரவேற்பை அளித்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கமரகட்டு, காதலை தவிற ஒன்றும் இல்லை, இளமி, அடுத்த சாட்டை ஆகிய படங்களில் நடித்தார். சாட்டை படத்திற்கு பிறகு அவருக்கு இளமி திரைப்படம் நல்ல பாராட்டை பெற்றது. அடுத்தடுத்து படங்களின் தோல்வியால் காணாமல் போனார். அடுத்த படங்களில் நடிப்பது குறித்த தகவலும் வெளியாகாமல் இருந்தன. யுவன் எங்கே இருக்கிறார் என்ன செய்கிறார் என்பதும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில், அவரது வீடிேயா இணையத்தில் வைரலாகி வருகிறது.

saattai-movie-hero-yuvan-emotional-interview

15 படங்களில் நடித்திருக்கிறேன்: பிரபல யூடியூப் சேனலில் யுவன் அளித்திருக்கும் பேட்டி வைரலாகி வருகிறது. இதில், சென்னை பகுதியில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருவதாக யுவன் தெரிவித்தார். இந்த வீடியோவில் நடிகர் யுவன் பரோட்டா தட்டி போடுவதும் பின்பு கொத்து பரோட்டா போடுவது போன்ற வீடியோ இடம்பிடித்திருக்கிறது. பிறகு பேசிய அவர், நான் இதுவரை 13 படம் நடித்திருக்கிறேன். ஆனால் யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை. சினிமாவில் லக் இருந்தால் தான் ஜெயிக்க முடியும். அது காலம் கடந்து தான் தெரியவந்தது. சாட்டை படம் நல்ல படம் ஆனால், அதற்கடுத்து நடித்த படங்கள் நடித்து முடித்தும் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. அதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. சாட்டைக்கு பிறகு அடுத்த சாட்டை மூலம் கம்பேக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன் எதுவும் கை கூடவில்லை என யுவன் தெரிவித்தார்.

இயக்குநர் பாலாவை நம்பினேன்: சாட்டை படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் இயக்குநர் பாலா படத்தில் நடிக்க கமிட் ஆனேன். என்னால் நம்ப முடியவில்லை. இயக்குநர் பாலா படத்தில் நான் நடிக்கிறேன். இதை வெளியே யாரிடமும் சொல்லாமல் மனதுக்குள் வைத்திருந்தேன். பிறகு ஒருநாள் என்னை பாலா சார் அழைத்து போட்டோஷூட் நடத்தினார். அவரே புரோமோஷனுக்காக போட்டோக்களை எடுத்து வெளியிட்டதும் பெரிய சர்ப்ரைஸாக இருந்தது. மேலும், படம் எடுப்பதாக அறிவிப்பும் வெளியானநிலையில், தீடீரென டிராப் ஆனது. படப்பிடிப்பு நடப்பதற்கு முன்பே இந்த அதிர்ச்சி செய்தியை கேட்டு எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியவில்லை. பாலா சார் படத்தை ரொம்ப நம்பினேன் என யுவன் சோகத்துடன் தெரிவித்தார்.

saattai-movie-hero-yuvan-emotional-interview

உடல் உழைப்பு: மேலும், பாலா சார் என்னிடம் வந்து அப்படத்தின் கதாப்பாத்திரம் குறித்தும் சொன்னார். நான் அந்த படத்தில் ஓட்டலில் பரோட்டா போடும் பையனாக நடிக்க இருந்தேன். இதற்காக நாக்பூர் சென்று பரோட்டா போட கத்துக்கொண்டேன். ரொம்ப உடம்பை போட்டு தாடி வளர்த்து பயங்கரமான உடல் உழைப்பை செலுத்தினேன். இந்த மாதிரி ஒருத்தன் பாலா சார் படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என்பதை தியேட்டரில் பார்க்க ரொம்ப ஆவலோடு காத்திருந்தேன் எல்லாம் வேஸ்ட் ஆகிடுச்சு என நடிகர் யுவன் தெரிவித்தார். நாச்சியார் படத்திற்கு முன்பு பாலா சார் நான் நடிக்கும் படத்தை இயக்க வேண்டியது. என்னுடைய பேட் லக் அமையவில்லை. இப்போது வரைக்கும் எதனால் அந்த படம் டிராப் ஆச்சுனு தெரியலை. இந்த விரக்திதான் நான் படத்தில் நடிப்பதையே நிறுத்திவிட்டேன் என எமோஷனலாக யுவன் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X