பரோட்டா மாஸ்டராகிட்டேன்னு ஃபீல் பண்ணாரே சாட்டை யுவன்.. திடீரென திருமணத்தையே முடிச்சிட்டாரு பாருங்க!

சென்னை: இயக்குநர் ஃபெரோஸ் கானின் மகனான அஜ்மல் கான் சினிமாவுக்காக தனது பெயரை யுவன் என மாற்றிக் கொண்டார். கடந்த 2011ல் வெளியான பாசக்கார நண்பர்கள் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், சமுத்திரகனி, தம்பி ராமையா நடித்த சாட்டை படத்தில் பள்ளி மாணவனாக நடித்து பிரபலமானார். இவருக்கு காதலி, காதல் பாட்டு என வைத்து ஹீரோவாகவே ஆக்கியிருந்தனர்.

சினிமாவில் 15 படங்களுக்கும் மேல் நடித்தும் பெரிதாக சோபிக்காத யுவன் ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக மாறிவிட்டதாக சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் ஷாக் ஆக்கியது. இந்நிலையில், திருமணத்தையே திடீரென முடித்திருக்கிறார் அஜ்மல் கான். அவரது திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Saattai movie hero Yuvan marries Sameera pics trending now

சாட்டை தந்த பிரபலம்: இயக்குநர் அன்பழகன் இயக்கி சமுத்திரகனி, தம்பி ராமைய்யா நடிப்பில் வெளியான சாட்டை படத்தில் பள்ளி மாணவனாக கதையின் நாயகனாக நடித்திருப்பார் யுவன் என்கிற அஜ்மல் கான். சாட்டை படத்தின் வெற்றி யுவனுக்கு கீரிப்பிள்ளை, காதலை தவிர வேறோன்றுமில்லை, கமரக்கட்டு, இளமி, அய்யனார் வீதி, விளையாட்டு ஆரம்பம், கடைசியாக வெளியான அடுத்த சாட்டை என 10க்கும் மேற்பட்ட படங்களை கொடுத்தது.

பரோட்டா மாஸ்டரான ஹீரோ: இன்னும் 5 படங்கள் இவர் நடிப்பில் ரெடியாக இருக்கிறது விரைவில் ரிலீஸ் ஆகும் என்கிற நம்பிக்கையுடன் உள்ளார். ஆனால், சினிமாவில் தொடர்ந்து ஃபிளாப் கொடுத்து அடிவாங்கிய நிலையில், ஹோட்டல் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக மாறியுள்ள யுவன் வகை வகையான பரோட்டாக்களை எப்படி போடுவது என்றும் பரோட்டாவை எப்படி ரெடி பண்றோம் என பரோட்டாவுக்கு பாடமே நடத்திய வீடியோ டிரெண்டானது.

Saattai movie hero Yuvan marries Sameera pics trending now

பாலா மோசம் பண்ணிட்டாரு: சினிமாவில் நடிப்பதை விட்டு விட்டு பரோட்டா மாஸ்டராக மாறுவதற்கு காரணமே இயக்குநர் பாலா தான் என்றும் அவர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட் ஆகியிருந்தேன். அந்த படத்தின் அறிவிப்பும் வெளியானது. ஆனால், அந்த படம் கடைசியில் ஆரம்பிக்காமல் அப்படியே நின்று விட்டது. எங்கே போனாலும், பாலா சார் படம் என்ன ஆச்சு? என்றே கேட்க ஆரம்பித்து விட்டனர். அதன் காரணமாகவே சினிமாவில் இருந்து விலகிவிட்டேன் என்றார்.

திடீர் திருமணம்: சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபலமான விஜிபி ரெசார்ட்டில் அஜ்மல் கான் எனும் யுவன் சமீரா எனும் பெண்ணை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார். அவரது திருமணத்துக்கு சினிமாவில் இருந்து சீமான், ரியாஸ் கான், உமா ரியாஸ், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். யுவனின் திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X