அடக்கொடுமையே.. பரோட்டா மாஸ்டரான சாட்டை பட ஹீரோ.. 15 படம் நடிச்சும் இந்த நிலைமைக்கு வந்துட்டாரே!

சென்னை: இயக்குநர் ஃபெரோஸ் கானின் மகனான யுவன் தமிழ் சினிமாவில் 2011ம் ஆண்டு வெளியான பாசக்கார நண்பர்கள் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால், அந்த படத்தைத் தொடர்ந்து இவர் நடித்த சாட்டை திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. யுவன் எனும் நடிகர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரிய வர காரணமும் சாட்டை திரைப்படம் தான்.

பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த அப்பாஸ், ரவிகிருஷ்ணா உள்ளிட்ட நடிகர்களே சினிமாவில் தொடர முடியாமல் காலத்தின் சூழ்நிலையால் வேறு வேறு வேலைக்கு சென்று விடும் நிலையை பார்த்திருக்கிறோம். அதே போல ஒரு சூழ்நிலையில் தான் சினிமாவில் எப்படியாவது சாதிக்கலாம் என வந்த இளம் நடிகர் தற்போது ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக மாறிவிட்ட கதையை சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Saattai movie hero Yuvan turned Parotta master shocks fans

சாட்டை பட நடிகர்: அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரகனி, தம்பி ராமைய்யா நடிப்பில் வெளியான சாட்டை படத்தில் பள்ளி மாணவனாக கதையின் நாயகனாக நடித்திருப்பார் யுவன். அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது மட்டுமின்றி வரிசையாக பல பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது. சாட்டை படத்தைத் தொடர்ந்து கீரிப்பிள்ளை, காதலை தவிர வேறோன்றுமில்லை, கமரக்கட்டு, இளமி, அய்யனார் வீதி, விளையாட்டு ஆரம்பம், கடைசியாக வெளியான அடுத்த சாட்டை என 10 படங்கள் இவர் நடிப்பில் வெளியாகி உள்ளன.

பரோட்டா மாஸ்டர்: மேலும், ஒரு 5 படங்கள் இவர் நடிப்பில் உருவாகி பாதியிலேயே நின்று விட்டதாம். சில படங்கள் ரிலீஸ் ஆகும் என்கிற நம்பிக்கையில் உள்ளார். இந்நிலையில், ஹோட்டல் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக மாறியுள்ள யுவன் அந்த யூடியூப் வீடியோவில் வித விதமான பரோட்டாக்களை எப்படி போடுவது என்றும் பரோட்டாவை எப்படி தயார் செய்ய வேண்டும் என தெளிவாக விளக்கிக் கொண்டே தனது ஹோட்டலில் கொடுத்த பேட்டி தீயாக பரவி வருகிறது.

Saattai movie hero Yuvan turned Parotta master shocks fans

பாலா படத்தால் வந்த வினை: சினிமாவில் இருந்து ஒரேயடியாக பரோட்டா மாஸ்டராக மாறுவதற்கு என்ன காரணம் என கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், பாலா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட் ஆகியிருந்தேன். அந்த படத்தின் அறிவிப்பும் வெளியானது. ஆனால், அந்த படம் கடைசியில் ஆரம்பிக்காமல் அப்படியே நின்று விட்டது. எங்கே போனாலும், பாலா சார் படம் என்ன ஆச்சு? என்றே கேட்க ஆரம்பித்து விட்டனர். அந்த படத்தில் நடிக்கத் தான் பரோட்டா தயாரிக்க கற்றுக் கொண்டேன். கடைசியில் அதுவே என் வாழ்க்கையாக மாறிவிட்டது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X