»   »  தினசரி செய்திகளை திரைக்கதையாக வைத்து உருவாகும் சாவி!

தினசரி செய்திகளை திரைக்கதையாக வைத்து உருவாகும் சாவி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தினசரி செய்தித்தாள்களில் வருகிற நிகழ்வுகளைக் கோர்த்து ஒரு கதையாக்கி படமாக உருவாக்கி வருகிறார் பிரகாஷ் சந்திரா.

முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் போன்ற படங்களில் நடித்தவர் பிரகாஷ் சந்திரா. பிரபு சாலமனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியவர்.

Saavi based on daily news reports

தனது முதல் படத்துக்கு சாவி எனத் தலைப்பிட்டுள்ளார். 1985-ல் சத்யராஜ் ஹீரோவாக அறிமுகமான படத்தின் தலைப்பு இது.

இப்படத்தை தி ஸ்பார்க்லேண்ட் நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் சந்திராவே தயாரித்து நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சுனு லட்சுமி நடித்து வருகிறார். ராஜ லிங்கம் வில்லனாக நடிக்கிறார்.

Saavi based on daily news reports

தினசரி செய்தித்தாள்களில் வருகிற நிகழ்வுகளைக் கோர்த்து ஒரு கதையாக்கி அதற்கு விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்து யதார்த்தமாக ஒரு வாழ்வியலை பதிவு செய்துள்ளதாக்க கூறுகிறார் பிரகாஷ் சந்திரா.

Read more about: tamil cinema, saavi, சாவி
English summary
Prakash Chandra, the actor known for Goripalayam has turned as full time hero and director in a movie titled Saavi.
Please Wait while comments are loading...