twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பைரவாவுடன் மோத முயன்றோம்... நல்ல தியேட்டர்கள் கிடைக்கலியே! - புது இயக்குநரின் ஆதங்கம்

    By Shankar
    |

    சாயா படத்தின் வெளியீடு இருமுறை தள்ளிப்போய் இப்போது பிப்ரவரி 2 ஆம் தேதி உறுதியாக வெளியாக உள்ளது.

    அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள படம் சாயா. விஎஸ் பழனிவேல் இயக்கியுள்ளார். இது அவருக்கு முதல் படம்.

    Saaya to hit screens on Feb 2

    'கல்வி எல்லோருக்கும் அவசியம் என்ற அடிப்படை உரிமை இன்று மிகப்பெரிய வியாபாரமாக மாறிவிட்டது. அந்த வியாபாரத்தை எதிர்த்துப் போராடும் ஒரு பெண் பலியாகிறாள். பின் நடப்பதெல்லாம் ஆத்மாவின் விளையாட்டு' - இதுதான் படத்தின் கதையாம்.

    "பொதுவாக ஆத்மா சம்பந்தப்பட்ட கதை என்றால் அந்த படம் பயமுறுத்துவது போல்தான் இருக்கும். ஆனால் முதன்முறையாக பெற்றோர்களும், குழந்தைகளும் அவசியம் பார்க்க வேண்டிய படமாக உருவாகியுள்ளது 'சாயா.'

    Saaya to hit screens on Feb 2

    தனியார் பள்ளிகளில் நடக்கும் தவறுகளை ஆணித்தரமாக பேசுவதோடு, இன்றைய கல்வி நிலையங்களின் உண்மையான முகத்தை தோலுரித்துக்காட்டும் படமாகவும் சாயா படம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தைகள் ஒருமுறையாவது இந்த படத்தைப் பார்த்தால் அவர்களுக்கு கல்வியின் அவசியம் புரியும். ஆசிரியர்களும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் பாடம் சொல்லிக்கொடுக்கும் படமாக உருவாகியுள்ளது சாயா.

    ஆரம்பத்தில் பைரவா படத்துடன் வந்துவிடலாம் என்று முடிவெடுத்துக் களமிறங்கினோம். நல்ல தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல். பெரிய படங்கள் வெளிவரும்போது சிறு படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்க வேண்டும். அதற்கு எப்போ வழிபிறக்கும்னு தெரியலை.

    Saaya to hit screens on Feb 2

    போதாக்குறைக்கு நம்ம வீட்டில் ஒரு இளைய தளபதி ரசிகர் இருக்கிறார். அவர், 'எங்கள் தளபதி படம் வெளியாகும்போது நீங்கள் எப்படி வெளியிடலாம்' என ஒரே தகராறு. வீட்டிலேயே எதிர்ப்பிருந்தா எப்படி வெளியிடுறது தள்ளிப்போட வேண்டியதாயிற்று.

    மறுபடியும் வெளியிட தேதி குறித்தபோது சல்லிக்கட்டு போராட்டம். ஒட்டுமொத்த நாடே களமிறங்கி நிற்கும்போது நான் எப்படி படத்தை வெளியிடுவேன்? தள்ளி வைத்தேன். இப்போதும் போகன் வருகிறது என்கிறார்கள். வரட்டும். ஆனால் இது சமூகத்திற்கு சொல்லவேண்டிய கருத்துள்ள படம். மக்களுக்கான படம். தைரியமாக வெளியிடுகிறேன்," என்கிறார் இயக்குநர் வி எஸ் பழனிவேல்.

    தமிழ் ஹீரோயின்

    சாயா படத்தில், நாயகி காயத்ரி ஒரே டேக்கில் நீண்ட பெரிய வசனத்தை படத்தில் இரண்டு இடத்தில் பேசி நடித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், "நீண்ட வசனத்தை ஒரே டேக்கில் பேசி நடிக்க வேண்டும் என்று இயக்குநர் பழனிவேல் கூறியபோது, பயந்தேன். ஆனால் இயக்குநர் பழனிவேல் தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார். தமிழ் தெரிந்த நாயகி என்பதால் புரிந்து பேசி ஒரே டேக்கில் நடிக்க முடிந்தது. இன்னும் இதுபோன்ற சவாலான வேடங்களும் சமூக அக்கறையுள்ள படங்களாக கிடைத்தால் நடிப்பின் மூலம் சமூகத்திற்கும் பயனுள்ள செய்திகளை சொல்ல முடியும். இந்த கேரக்டரை எனக்குத் தந்த இயக்குநருக்கு என் நன்றிகள்," என்றார்.

    சாயா படத்தில் புதுமுகம் சந்தோஷ் கண்ணா, டூரிங் டாக்கீஸ் படத்தில் நடித்த காயத்ரி ஹீரோயின். சோனியா அகர்வால் அதிரடி நாயகியாக நடித்துள்ளார்.

    Read more about: saaya பைரவா
    English summary
    Debutant director V S Palanivel's Saaya movie will be hits the screen on February 2nd.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X