சந்தானத்தின் சபாபதி டிரைலர் ரிலீஸ்… சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குதுடா சாமி!
சென்னை : நடிகர் சந்தானம் நடித்துள்ள சபாபதி திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தப் படம் வரும் நவம்பர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தில் ப்ரீத்தி வர்மா சந்தானத்திற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் தமிழிலில் அறிமுகமாகும் இவர், ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தானம்
நகைச்சுவை நடிகராக கலக்கிக் கொண்டிருந்த சந்தானம், தனது டிராங்கை மாற்றி வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார் . அந்த திரைப்படம் வெற்றியை பெற்றது. இதையடுத்து, தில்லுக்கு துட்டு 1, 2, ஏ1, டகால்டி, பாரீஸ் ஜெயராஜ்,டிக்கிலோனா போன்ற திரைப்படங்களில் ஹீரோவா நடித்து வருகிறார்.

சபாபதி
இதையடுத்து, சந்தானம் அறிமுக இயக்குனர் சீனிவாசராவ் இயக்கத்தில் சபாபதி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பிரீத்தி வர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். சாயாஜி ஷிண்டே, எம்.எஸ்.பாஸ்கர், விஜய் டிவி புகழ் சுவாமிநாதன், காமெடி பஜார் மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையில் உருவாகியுள்ள இப்படத்தை ஆர் கே என்டர்டெயின்மென்ட் சார்பில் சி ரமேஷ் குமார் தயாரித்துள்ளார்.
டிரைலர் ரிலீஸ்
சந்தானத்தின் சபாபதி திரைப்படம் நவம்பர் 19ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ள நிலையில், இத்திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இப்படத்தில் சந்தானம் திக்குவாய் இளைஞனாக நடித்துள்ளார். அவர் தனது திக்குவாயால் சந்திக்கும் பிரச்சினைகளை நகைச்சுவையுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் ஆர்வம்
வழக்கமாக சந்தானம் படம் என்றாலே சிரிந்து சிரிந்து வயிறு வலிக்கும் அளவுக்கு நகைச்சுவை இருக்கும், இதற்கு சற்றும் குறைவில்லாமல் இந்த படம் இருக்கும் என்பது டிரைலரில் தெரியவந்துள்ளது. இதனால் சந்தானத்தின் ரசிகர்கள் இப்படத்தை திரையில் பார்த்து கொண்டாட தயாராகி விட்டார்கள் .


Click it and Unblock the Notifications











