Jayaram: சபரிமலை தங்க திருட்டு வழக்கு.. நடிகர் ஜெயராமிடம் துரு துருவி விசாரணை!
சென்னை: சபரிமலை ஐயப்பன் கோவிலின் ஆபரணங்களில் இருந்து தங்க திருட்டு வழக்கில் நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் சென்னையில் அவரது இல்லத்தில் விசாரணை நடத்தினர். சபரி மலை தங்கத் திருட்டு வழக்கின் விசாரணை தற்போது முக்கிய கட்டத்தை எட்டி உள்ளது.
இந்த தங்க திருட்டு வழக்கின் பிரதான குற்றவாளியாகக் கருதப்படும் உண்ணிகிருஷ்ணன் பொட்டியுடன் நடிகர் ஜெயராம் எத்தனை முறை பூஜைகளில் கலந்து கொண்டார். இவர்களுக்கு இடையே எந்தவிதமான நிதி பரிவர்த்தனைகள் நடந்தது என்பதைக் குறித்து சென்னை உள்ள அவரது இல்லத்தில் வைத்து SIT அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கோவிலின் காவல் தெய்வம் விக்ரகங்களிலும், கருவறை கதவு சட்டகங்களிலும் இருந்து தங்கம் காணாமல் போனது தொடர்பான இரண்டு வழக்குகளை மையமாகக் கொண்டு நடைபெற்று வருகிறது.

நடிகர் ஜெயராம்: 2019 ஆம் ஆண்டு சென்னையில் உண்ணிகிருஷ்ணன் பொட்டி ஏற்பாடு செய்த பூஜையில், கோவிலில் இருந்து தங்க பூச்சுக்காக எடுத்துச் செல்லப்பட்ட தங்கத் தகடுகளை வீட்டில் வைத்து பூஜை செய்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவியது. இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஜெயராம், நான் 40 ஆண்டுகளாக சபரிமலைக்கு சென்று வருவதால் உன்னிகிருஷ்ணன் பொட்டி என்பவரை எனக்கு தெரியும். சபரிமலை கருவறைக்குச் செய்யப்பட்ட தங்கத் தகடுகளை வீட்டில் வைத்துப் பூஜை செய்தால் செழிப்பு உண்டாகும் என அவர் சொன்னதால்தான் பூஜை செய்தோம் என ஜெயராம் கூறியிருந்தார். இந்த வழக்கில் ஜெயராம் நேரடி தொடர்பு இல்லையென விளக்கம் அளித்து இருந்தாலும், விசாரணையின் தொடர்ச்சியாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
12 பேர் கைது: இந்த வழக்குகளுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட முன்னாள் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு (TDB) நிர்வாக அதிகாரிகள் பி. முராரி பாபு மற்றும் எஸ். ஸ்ரீகுமார் ஆகியோர் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்தனர். ஸ்ரீகோவில் தங்க தகடு காணாமல் போன இரண்டாவது வழக்கில் ஸ்ரீகுமார் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை. உண்ணிகிருஷ்ணன் பொட்டி ஒரு வழக்கில் சட்டப்படி ஜாமீன் பெற்றுள்ள நிலையில், மற்றொரு வழக்கில் தொடர்பாக அவர் இன்னும் சிறையில் உள்ளார். இந்த தங்க முறைகேடு வழக்குகளில், இரண்டு தேவஸ்வம் போர்டு தலைவர்கள் உட்பட மொத்தம் 12 பேரை SIT கைது செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











