Don't Miss!
- News
ஞானவாபி மசூதி விவகாரம்.. நீதிமன்றம் சென்ற முஸ்லீம் அமைப்பினர்! இன்று வாரணாசி கோர்டில் விசாரணை
- Technology
ரூ.300 விலைக்குள் இத்தனை சிறந்த Airtel, Vi திட்டங்களா? பட்ஜெட் விலையில் பெஸ்டான நன்மைகள்..
- Automobiles
மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல... நடந்தது என்ன?
- Finance
இன்று தங்கம் விலை எப்படியிருக்கு.. கூடிருக்கா.. குறைஞ்சிருக்கா..!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்...
- Sports
ஒரே ஓவரில் மாறிய விதி.. ஹாசல்வுட் செய்த கடைசி நேர மேஜிக்.. ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது எப்படி?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சபாஷ் ராஜு.... கடைசியில் மனதில் உறுத்திய விஷயத்தை சொல்லி வருத்தம்....
சென்னை: பிக்பாஸ் வீட்டில் கடைசி வாரத்தில் கமல் வைத்த மன்னிப்பு, நன்றி டாஸ்க்கில் ஹவுஸ்மேட்ஸ் மனம் திறந்து பேசினர். இதில் ராஜு தனது முதல் வாரத்தில் நடந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டது அவரது ரசிகர்களால் பாராட்டப்படுகிறது. நல்ல பண்புகளை வளர்ப்பதற்கு இந்த நிகழ்ச்சி உதவுகிறது என்பதற்கு இது உதாரணமாக அமைந்துள்ளது.
சாய்னா
நேவாலுக்கு
ஆபாச
கமெண்ட்
போட்ட
நடிகர்
சித்தார்த்..
நோட்டீஸ்
அனுப்பிய
மகளிர்
ஆணையம்

உளவியல் சார்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சி
பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும்பாலும் உளவியல் சார்ந்த விஷயம் ஆகும். 100 நாட்கள் ஒரு மனிதனின் மனம் எப்படியெல்லாம் மாற்றம் அடைகிறது, மனித மனதின் அனைத்து அம்சங்களும் எப்படி வெளிப்படுகிறது. சக மனிதர்களிடம் பழகுவது, பிரச்சினைகளை பார்க்கும் விதம், எப்படி பிரச்சினைகளை சந்திக்க வேண்டும், எப்படி சந்திக்கக்கூடாது போன்ற பல விஷயங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறியலாம்.

மேல்தட்டு வர்க்க யதார்த்தமின்மை
மேல்தட்டு வர்க்கத்திலிருந்துதான் பெரும்பாலும் போட்டியாளர்கள் வருவார்கள். இதில் அவர்களின் போலி நாகரீகம் சில நாட்கள் இருக்கும் நாளாக ஆக அது கலைந்து உண்மை முகம் வெளிப்படும்போது யதார்த்தத்தை புரிந்துக்கொள்ளும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கிறது. அதே நேரம் எதைப்பின்பற்றக்கூடாது என்பது குறித்தும் அவ்வப்போது சமூக வலைதள விமர்சகர்கள், நெறியாளர் கமல் அறிவுரை மூலம் வாசகர்கள் அறிய முடிகிறது.

அடித்தட்டு மக்களின் பங்கேற்பு
பிக்பாஸில் சில நேரம் அடித்தட்டு மக்களும் பங்கேற்கின்றனர், சில நடுத்தரவர்க்க போட்டியாளர்களும் கலந்துக்கொள்கின்றனர். அப்படி வந்தவர் ராஜு இன்று போட்டியை வெல்லும் நிலையில் உள்ளார். அடித்தட்டு மக்களாக வந்தவர்களில் தாமரை, இசைவாணி, சின்னப்பொண்ணு, அமீர் போன்றவர்கள் உண்டு. அதிலும் அக்மார்க் கிராமத்து பெண் தாமரை அனைவர் உள்ளங்களையும் கொள்ளைக்கொண்டார்.

நெறியாளர் கமலின் கண்டிப்பு
பிக்பாஸ் நல்ல நடத்தையின் வழிகாட்டுதலாக அமையவேண்டும் என்பதை அனைவரும் உறுதியாக நிற்கிறார்கள், இந்தி பிக்பாஸ் போல் அல்ல பெண்களை மதிப்பது, தவறான வார்த்தைகள், நாகரீகமற்ற நடவடிக்கைகள், அறுவெறுக்கத்தக்க நடவடிக்கைகளுக்கும் அனுமதி இல்லை என்பதில் நெறியாளர் கமல் ஆரம்ப கால பிக்பாஸிலேயே பதிவு செய்துள்ளார். அதன் வெளிப்பாடாக நேற்று நடந்த விஷயத்தை பார்க்க முடிந்தது.

நெருடலான விஷயம்
வயதில் இளையவர், நகர வாழ்க்கையில் பழகியவர் பண்பாளர் என்றாலும் அடுத்தவர் வாழ்க்கையை அவரது நிலைப்பாட்டிலிருந்து பார்க்கவேண்டும் என்கிற எண்ணமும் இருக்கவேண்டும் என்பதில் ராஜு சில இடங்களில் தவறியது பிக்பாஸ் முழுவதும் நெருடலாக இருந்தது. அதை ராஜு நேற்றைய விஷயத்தில் சரி செய்தார் ராஜு இதன்மூலம் ரசிகர்கள் மனதில் ராஜு உயர்ந்துள்ளார்.

சின்னப்பொண்ணுவிடம் மன்னிப்பு கேட்ட ராஜு
முதலில் அவர் சின்னப்பொண்ணுவிடம் மன்னிப்பு கோரினார். அவர் சின்னப்பொண்ணு சொன்னக்கதைக்கு டிஸ்லைக் போட்டார். ஒரு வறுமையில் வாடிய கலைஞர் அவரது வாழ்க்கையை சுவைகூட்டி சொல்ல முடியாது, ஆனால் அதன் ஆழமான சோகத்தை அசால்டாக ராஜு டிஸ்லைக் கொடுத்ததை ஜேம்ஸ் வசந்தன் போன்ற விமர்சகர்கள் கண்டித்திருந்தனர். தனது அச்செயலுக்கு 98 நாட்கள் கழித்து ராஜு சின்னபொண்ணுவிடம் மன்னிப்பு கோரியது அனைவரையும் நெகிழ வைத்தது.

இளம் தலைமுறையினருக்கு நல்ல எண்ணங்களை வளர்க்க வாய்ப்பு
அதேபோல் பாவனியை நான் தெரிந்தே நோகடித்தேன் எனக்கூறி மன்னிப்பு கோரியதும், அதைக்கேட்டு பாவனி நெகிழ்ந்து அவர் கையைப்பிடித்து நன்றி கூறியதும் மிகச்சிறப்பாக இருந்தது. இதுபோன்ற செயல்கள் மக்கள் மனதில் பரவலாக செல்லும்போது பெண்களை, இயலாதவர்களை மதிக்கும் பண்பு இளம் தலைமுறையினரிடம் வளரும் அந்த வகையில் ராஜு நல்ல வழியைக்காட்டியுள்ளார்.