Sabdham Blue Sattai Maran Review: கடைசி வரை ஒண்ணுமே இல்லை.. மொக்கை பேய்.. சப்தம் விமர்சனம்!
சென்னை: ஈரம் படத்தை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் ஆதி, லட்சுமி மேனன், சிம்ரன், லைலா உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் சில சிக்கல்கள் காரணமாக இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது சப்தம் திரைப்படம். இந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சியை பார்த்துவிட்டு ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் அளித்துள்ளார்.
கடந்த வாரம் வெளியான பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனத்தைக் கொடுத்த ப்ளூ சட்டை மாறன் இந்த வாரம் வெளியான ஜீவாவின் அகத்தியா மற்றும் ஆதியின் சப்தம் என இரு படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனத்தையே கொடுத்துள்ளார்.

அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடித்துள்ள சவுண்ட் ஹாரர் திரைப்படமான சப்தம் படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்த விமர்சனம் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..
ஆதியின் சப்தம்: மிருகம் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து கலக்கிய ஆதிக்கு ஈரம் திரைப்படம் நல்ல ஹீரோவாக வரவேற்பை பெற்றுத் தந்தது. அரவாண், மரகத நாணயம் என பல படங்களில் ஹீரோவாக நடித்த ஆதி தெலுங்கில் ராம் சரண் உள்ளிட்ட ஹீரோக்களின் படங்களில் வில்லனாகவும் மிரட்டி உள்ளார். மீண்டும் தமிழில் ஹீரோவாக அவர் நடித்துள்ள சப்தம் திரைப்படம் இன்று வெளியாகும் என அறிவழகன் மற்றும் ஆதி இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ஒரே சப்தமா இருக்கு: இந்த வாரம் தமிழ் சினிமாவில் ஃபேண்டஸி ஹாரர் மற்றும் சவுண்ட் ஹாரர் என 2 வித்தியாசமான பேய் படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இரண்டு படங்களுமே ரசிகர்களை கவரும் விதமாக ஒரு 4 நல்ல சீன் கூட இல்லாமல் உருவாகி இருப்பதாக ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். சப்தம் படம் ஒரே சத்தமா இருக்கு மற்றபடி அந்த படத்தில் நல்ல கதையோ திரைக்கதையோ இல்லை என நெகட்டிவ் விமர்சனத்தை ப்ளூ சட்டை மாறன் கொடுத்துள்ளார்.
மேக்கிங் சூப்பர்: ஆனால், சவுண்ட் டிசைன், ஒளிப்பதிவு என படத்தின் மேக்கிங் எல்லாம் ஹாலிவுட் படம் போல தரமாக உள்ளது என்றும் அந்த ஒரு விஷயம் மட்டும் தான் கடைசி வரை நம்மை படத்தில் எதையாவது காட்டுவார்கள் என்றும் ஜம்ப் ஸ்கேர் சீன் எல்லாம் வரும் என்று பார்க்க வைத்தது. ஆனால், கடைசி வரை எதுவுமே இல்லாதது ஏமாற்றமே என முடித்து விட்டார்.


Click it and Unblock the Notifications











