மவனே யாருகிட்ட.. இசையமைப்பாளர் தீனாவிற்கு கட்டம் கட்டிய இளையராஜா.. புதிய தலைவரானார் சபேசன்!
சென்னை: திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தேர்தலில் இசையமைப்பாளர் தீனா விதியை மீறி மீண்டும் தலைவராக போட்டியிட்டார். இது விதி மீறல் என்றும், மீண்டும் போட்டியிடக்கூடாது என இளையராஜா எச்சரித்தும், காதில் வாங்கிக் கொள்ளாமல் போட்டியிட்ட தீனா படு தோல்வி அடைந்துள்ளார்.
திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற இருந்தது. இந்த தேர்தலில், இதுவரை வாக்கு உரிமை இல்லாத அசோசியேட் உறுப்பினர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் சபேரேசன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தேர்தலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இசையமைப்பாளர் தீனா: இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை தள்ளுபடி செய்ததோடு, தேர்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் இரண்டாவது முறையாக இசையமைப்பாளர் தீனா தலைவர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார்.
விதியை மீறிய தீனா: அவர், போட்டியிடக்கூடாது என்றும், இந்த யூனியனின் ரூல் படி, ஒருவருக்கு இரண்டு ஆண்டு பதவி, 2 வருடம் நீட்டித்து கொள்ளலாம். ஆனால், தீனா அவர்கள் தனது அதிகாரத்தை பயன்படுத்தி 4 வருடம் ஆண்டிருக்கிறார். அடுத்தும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது விதி மீறல் என்று கங்கை அமரன் செய்தியாளர்களிடம் பேசி இருந்தார். மேலும், இந்த யூனியனில் நடக்க கூடாத பல சம்பவங்கள் நடந்துள்ளது. தீனா பண மோசடி செய்துள்ளார். அதை மூடி மறைக்கத்தான் அவர் மீண்டும் தலைவராக போட்டியிடுகிறார் என்று தீனாவை கடுமையாக தாக்கி பேசினார்.

தலைவரானார் சபேசன்: தீனா தலைவர் பதவிக்கு போட்டியிடக்கூடாது என்று பல ஒரு புறம் பிரச்சனை நடந்து கொண்டு இருக்க, நேற்று நடைபெற்றது. இதில், இசையமைப்பாளரும், தேனிசை தென்றல் தேவாவின் தம்பியான சபேசன் வெற்றி பெற்றார். மேலும் செயலாளராக முரளி, பொருளாளராக சந்திர சேகர், துணை தலைவராக மூர்த்தி, இணை செயலாளராக பத்மஸ்ரீ பாலேஷ், ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். சபேசனை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டி போட்ட தீனா 248 வாக்குகளே பெற்று தோல்வி அடைந்தார்.ஆனால், சபேசன் 318 வாக்குகள் பெற்று, 70 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தீனா விதியை மீறி தேர்தலில் போட்டியிட்டது மட்டுமில்லாமல் இளையராஜாவை அவமதித்தது தான் இந்த தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











