ஒரு நைட் அட்ஜஸ்மெண்ட் செய்தா போதும்.. லைஃப் செட்டில்.. பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்!
சென்னை: மலையாள சினிமாவில் அதிகமான பாலியல் தொந்தரவுகள் மற்றும் அட்ஜஸ்மெண்ட் பிரச்சனை இருப்பதாகஎழுந்த புகாரை தொடர்ந்து, ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டு. அண்மையில் கமிட்டி அறிக்கை வெளியிட்டது. இது பெரிய அளவில் பேசுபெருளாகி பெரும் புயலை கிளப்பியது. ஆனால், மலையாள சினிமாவில் மட்டுமில்லை அட்ஜஸ்மெண்ட் பிரச்சனை பலத்துறையில் உள்ளது என்றும், சினிமாவில் நடித்து அட்ஜஸ்மெண்ட் செய்து ஒரே இரவில் செட்டிலாகிவிடலாம் என்று தற்போது வரும் நடிகைகள் நினைப்பதாக பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், சினிமா துறை மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் தற்போது அட்ஜஸ்ட்மென்ட் என்பது வந்துவிட்டது. அட்ஜஸ்ட்மென்ட் என்பது தற்போது உலகம் முழுவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிவிட்டது. ஆனால், சினிமா என்பதால், இது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. இன்றைக்கு சினிமாவிற்கு நடிக்க வரும் நடிகைகளும் அட்ஜஸ்ட்மென்ட் செய்து ஒரு படத்தில் நடித்து பிரபலமாகி பின்னாளில் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிடலாம் என்ற எண்ணத்தில் சினிமாவிற்கு வருகின்றனர்.

பிரபலமாக இருந்தால் போதும்: இதே போல எனக்கு தெரிந்த நடிகையிடம் புதிதாக வந்த இயக்குனர் அட்ஜஸ்ட்மெண்ட் செய்யும்படி கேட்டுள்ளார். ஆனால் அந்த நடிகையோ, அட்ஜஸ்ட்மெண்ட் செய்வதில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. ஆனால் அதற்கு நீங்கள் ஒரு புகழ்பெற்ற தயாரிப்பாளராகவோ, இல்லை இயக்குனராகவே இருந்தால், அதன் மூலம் எனக்கு அடுத்தடுத்த படவாய்ப்பு வரும். ஆனால், சாதாரண ஒருவரான உங்களிடம் எனக்கு அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய விருப்பம் இல்லை என்று சொல்லி இருக்கிறார்.
சினிமாவில் எல்லாமே சாதாரணம்: ஆனால். அட்ஜஸ்ட்மென்ட் என்பது இப்போது வேறுவிதமாக மாறிவிட்டது. முன்வெல்லாம் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்வார்கள். ஆனால், இப்போது அட்ஜஸ்ட்மென்ட் செய்ய இவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டு வாங்கி கொள்ளும் சூழ்நிலை உருவாகிவிட்டது. இன்னும் சிலர் காதலிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு, வரம்பு மீறி பழகி,பின் பிடிக்கவில்லை என்றால், பிரேக் அப் என்று சொல்லி பிரிந்து விடுகிறார்கள். சினிமாத்துறையில் காதல், பிரேக் அப், திருமணம், எல்லாம் சாதாரணமாகி விட்டது.
இப்போது தமிழ் சினிமாவில் நடிகர்கள் எல்லாம் ஒரு பேருக்கு ஊறுகாய் போல தான் வந்து செல்கிறார்கள். அவர்களுக்கு எந்தவிதமான முக்கியமான கதாபாத்திரமும் கொடுக்கப்படுவதில்லை. ஹீரோயின் என்றால் டூயட் பாட வேண்டும், கவர்ச்சியாக நடிக்க வேண்டும் அவ்வளவுதான் இன்று பிரபல பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











