Sabitha Joseph: ஷாலினி அதைமட்டும் செய்யக்கூடாது.. பத்திரிகையாளர் சபிதா ஜோசப் அட்வைஸ்!
சென்னை: சினிமா விமர்சகரும் பத்திரிகையாளருமான சபிதா ஜோசப், தொடர்ந்து கோலிவுட்டில் பல விஷயங்கள், முன்னணி நடிகர்கள் குறித்து பேசி வருகிறார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஷாலினி மற்றும் அஜித் குறித்த அடுத்தடுத்த விஷயங்கள் குறித்து அவர் தனது பேட்டியில் பேசியுள்ளார்.
அஜித் போன்ற புரிந்துக் கொண்டு செயல்படும் கணவன் கிடைக்க ஷாலினி மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ள சபிதா ஜோசப், இதேபோல ஷாலினி போன்ற மனைவி கிடைக்கவும் அஜித் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஷாலினி மேற்கொண்டுள்ள அறுவை சிகிச்சை குறித்தும் அவர் பேசியுள்ளார்.

நடிகர் அஜித்: நடிகர் அஜித் பல ஆண்டுகளை கடந்து முன்னணி நடிகராக ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நாயகனாக இருந்து வருகிறார். தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார் அஜித். இதில் விடாமுயற்சி படம் இந்த ஆண்டிலேயே அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல, குட் பேட் அக்லி படம் அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தன்னுடைய ரசிகர்களின் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார் அஜித். தன்னுடைய குடும்பத்தினரை மட்டுமே தன்னுடைய ரசிகர்கள் அதிக அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கொள்கை உடையவர் அஜித்.
சபிதா ஜோசப் பேட்டி: அவரது இந்த கொள்கைக்காக, தன்னுடைய ரசிகர்கள் மன்றத்தை கலைத்ததுடன் தன்னை ரசிகர்கள் 'தல' என்று அழைக்கக்கூடாது என்றும் அஜித் முன்னதாக தன்னுடைய ரசிகர்களை கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவியும் முன்னாள் நடிகையுமான ஷாலினி குறித்து பல்வேறு விஷயங்களை பத்திரிகையாளரும் சினிமா விமர்சகருமான சபிதா ஜோசப் பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். நடிகர் அஜித் தன்னிடம் வேலை செய்தவர்களுக்கு வீடு வாங்கிக் கொடுத்து அவர்களின் இன்சூரன்ஸ் உள்ளிட்டவற்றிலும் கவனம் செலுத்துவதாக சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.
அஜித் -ஷாலினி ஜோடி: சமீபத்தில் ஷாலினிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த நேரத்தில் விடாமுயற்சி சூட்டிங்கிற்காக அஜித் அசர்பைஜானில் இருந்த நிலையில், சூட்டிங்கிலிருந்து சில தினங்கள் இடைவெளி எடுத்துக் கொண்டு சென்னை வந்த அஜித், ஷாலினியுடன் இருந்து அவரை பார்த்துக் கொண்டார். அஜித் போன்ற கணவன் கிடைக்க ஷாலினி கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ள சபிதா ஜோசப், அதேபோல ஷாலினி போன்ற பெண் மனைவியாக வாய்க்க அஜித்தும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இத்தனை ஆண்டுகள் திருமண வாழ்க்கையில், ஷாலினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூற அஜித் எப்போதும் மறந்ததில்லை என்றும் சுட்டிக் காட்டியுள்ளார். சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை அஜித்துடன் இணைந்து ஷாலினி கொண்டாடியதை பார்க்க முடிந்தது.
ஷாலினிக்கு அட்வைஸ்: ஷாலினி கர்ப்பப்பையில் பிரச்சினை இருந்ததாக மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சையை பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு சில தினங்களில் இயல்புநிலைக்கு ஷாலினி திரும்பியுள்ளதாகவும் அவர் அதிகமாக வெயிட் தூக்கக்கூடாது என்பதே இந்த அறுவை சிகிச்சையிலிருந்து அவர் விரைவில் மீள்வதற்கு முக்கியமான பரிந்துரையாக இருக்கும் என்றும் சபிதா ஜோசப் மேலும் கூறியுள்ளார். ஷாலினி வெயிட் தூக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் அவர் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார் என்றும் சபிதா ஜோசப் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











