ரஜினி மகளை திருமணம் செய்யவிருந்த ஜெயம் ரவி.. வளைத்துப்போட்ட மாமியார்..ரகசியத்தை சொன்ன பிரபலம்!
சென்னை: கடந்த சில வாரங்களாக ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து செய்தி தான் இணையத்தில் பேசு பொருளாக உள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் ரவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நீக்கிவிட்டார். இதுகுறித்து சினிமா பத்திரிகையாளர் சபிதா ஜோசப் வீடியோவில் பேசி உள்ளார்.
அண்மையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் சபிதா ஜோசப், நடிகர் ஜெயம் ரவி பற்றி பேசியுள்ளார். சினிமாவில் அடுத்தடுத்து வரும் விவாகரத்து செய்தி கேட்பதற்கே வருத்தமாக இருக்கிறது. இதற்கு எல்லாம் காரணம் ஈகோ பிரச்சனை தான், முன்பு எந்த பிரச்சனையாக இருந்தாலும் சேர்ந்து வாழவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார்கள் ஆனால், இப்போது அந்த எண்ணம் யாரிடமும் இல்லாததால், விவாகரத்து தற்போது சாதாரணமாகி விட்டது.

சபிதா ஜோசப்: ஆனால், ஜெயம் ரவியின் அப்பா மோகன் இதை நிச்சயம் ஏற்றுக்கொண்டு இருக்க மாட்டார். அவர் ஆரம்பத்தில் இருந்து கஷ்டப்பட்டு, கடுமையாக உழைத்து இன்று இந்த நிலைக்கு வந்து இருக்கிறார். மகன்கள் சினிமாவில் இருந்தாலும் எந்தவிதமான கிசுகிசுவில் சிக்கவில்லை, அதே போல மோகனின் மகளும் மருத்துவம் படித்துவிட்டு நல்ல குடும்பத்தில் வாழ்த்து வருகிறார். அப்படி தனது குடும்பத்தையும் கட்டுக்கொப்பாக அமைதியாக வைத்து இருக்கிறார் மோகன். ஆனால், ஜெயம் ரவிதான் தற்போது விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். ஆனால், ஆர்த்தி தரப்பில் இருந்த எந்தவிதமான பதிலும் வரவில்லை. அவர் சேர்ந்து வாழ விரும்புவதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து இன்னும் ஒருவாரத்தில் தகவல் வந்துவிடும்.
வளைத்துப்போட்டார்: ஜெயம்ரவி சினிமாவிற்கு வந்த புதிதில்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளை திருமணம் செய்யப் போவதாகக்கூட செய்திகள் பரவியது.. ஜெயம் ரவி பார்ப்பதற்கு சார்மிங்காக ரொம்ப அழகாக இருந்தால், தன் மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆர்த்தியின் அம்மா சுஜாதா ஆசைப்பட்டார். ஜெயம் ரவியின் குடும்பம் கட்டுக்கோப்பான குடும்பமாக இருந்ததால், ஜெயம் ரவியை வளைத்துப்போட்டார். ஆனால்,அதன் மருமகனை வைத்து பல படத்தை தயாரித்தார், மகள் குடும்பத்தில் மீது மிகுந்த பாசத்துடன் தான் இருந்தார். அதே போல ஜெயம்ரவியும் மாமியார் மீது பாசத்தோடுதான் இருந்தார் என்று பத்திரிக்கையாளர் சபிதா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











