எஸ்.ஏ.சி. மீது அவமதிப்பு வழக்கு
நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சந்திரசேகருக்கு நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தயாரிப்பாளர் குஞ்சுமோனின் மகன் எபி குஞ்சுமோன். இவர் சுவாசம் என்ற படத்தை தயாரித்து, நடித்து வந்தார். ஆனால் இப்படம் முழுமையாக வளராமல் பாதியில் நிற்கிறது.இந்த நிலையில், தனது சுவாசம் படத்தின் கதையை திருடி, எஸ்.ஏ.சந்திரசேகர் நெஞ்சிருக்கும் வரை (நரேன், தீபா நடித்த படம்) படத்தை எடுத்து விட்டார் என்று கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் எபி.
வழக்கை விசாரித்த நீதிபதி சுதாகர், ரூ. 25 லட்சம் பணத்தை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யுமாறும், படத்தை வெளியிட தடை இல்லை என்றும் தீர்ப்பளித்தார். இதையடுத்து நெஞ்சிருக்கும் வரை படம் ரிலீஸானது. ஆனால், எஸ்.ஏ.சந்திரேசகர் நீதிமன்றம் உத்தரவிட்டபடி பணத்தை டெபாசிட் செய்யவில்லை.
இதையடுத்து எஸ்.ஏ.சந்திரசேகர் மீது உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார் எபி. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுதாகர், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி சந்திரசேகருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











