விஜய் முதல்வராக வேணும்னு ரசிகர்கள் ஆசைப்படுவதில் தப்பு இல்லையே: எஸ்.ஏ.சி.
Recommended Video

சென்னை: விஜய் வருங்கால முதல்வராக வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் ஆசைப்படுவது குறித்து எஸ்.ஏ. சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இறுதிகட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கிறது. படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது.
விஜய் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாடப் போவது இல்லை.

சோகம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பங்கள் வாடிக் கொண்டிருக்கும்போது தனது பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லையாம் விஜய். ரசிகர்களையும் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

எஸ்.ஏ.சி.
விஜய்யின் பிறந்தநாளின் போது அவரது ரசிகர்கள் பிரமாண்ட போஸ்டர்கள் அடிப்பது புதிது அல்ல. அவர்கள் விஜய் மீது வைத்திருக்கும் அன்பால் அவரை வருங்கால முதல்வரே என்று குறிப்பிட்டு போஸ்டர்கள் அடிக்கிறார்கள் என்கிறார் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகர்.

முதல்வர்
ரஜினியின் ரசிகர்களோ அவரை வருங்கால முதல்வரே என்று கூறி கடந்த 25 ஆண்டுகளாக போஸ்டர் அடிக்கிறார்கள். ஒரு தந்தையாக என் மகன் இந்த நாட்டில் முக்கியமான நபராக ஆக வேண்டும் என்று விரும்புகிறேன். அதை அவர் அரசியல் மூலம் செய்வாரோ இல்லை வேறு துறை மூலம் செய்வாரோ அது எனக்கு தெரியாது. அது விஜய்யின் விருப்பம் என்று எஸ்.ஏ.சி. தெரிவித்துள்ளார்.

அன்பு
விஜய் முதல்வராகி தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் விரும்புகிறார்கள். அதில் தவறு எதுவும் கிடையாது என்று எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியுள்ளார்.

கமல்
கமல் ஹாஸன் புதுக் கட்சி துவங்கி அரசியல்வாதியாகிவிட்டார். அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவிப்பு வெளியிட்ட ரஜினி புதுக்கட்சி துவங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அடுத்து விஜய்யும் புதுக்கட்சி துவங்கினால் அவரது ரசிகர்கள் நிச்சயம் பேராதரவு கொடுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications











