பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சாச்சனா.. புள்ள ஒருநாள்கூட இல்லையே...விஜய் சேதுபதி ரியாக்‌ஷன் என்ன?

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இன்று தொடங்கியிருக்கிறது. விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதால் இந்த சீசன் மீது மேலும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டிருக்கின்றனர். இந்த சீசனின் போட்டியாளர்கள் எவ்வளவு கண்ட்டெண்ட் கொடுக்க காத்திருக்கிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்களும் ஆவலோடு இருக்கிறார்கள். இந்த முறை பலருக்கும் அதிர்ச்சி தரும் விதமாக 24 மணிநேரத்திலேயே எவிக்ட் என்ற ரூலை கொண்டுவந்திருக்கிறார் பிக்பாஸ்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருக்கிறது. இதுவரை கமல் ஹாசன் தொகுத்து வழங்கிவந்தார். ஆனால் கடந்த சீசனில் அவர் மீது சில விமர்சனங்கள் வந்தன. சூழல் இப்படி இருக்க அவர் பிக்பாஸிலிருந்து வெளியேறினார். அதனையடுத்து நடிகர் விஜய் சேதுபதி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு கமிட்டாகியிருக்கிறார். இதன் காரணமாக இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு மக்களிடையே ஆவலும் அதிகரித்திருக்கிறது. கண்டிப்பாக நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக சேது கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கலாம்.

bigg boss vijay sethupathi sachana

போட்டியாளர்கள்: இந்த சீசனில் போட்டியாளர்களாக தயாரிப்பாளர் ரவீந்தர், நடிகர், இயக்குநர் ரஞ்சித், சீரியல் நடிகர் அர்னவ், அருண் பிரசாந்த், நடிகர் தீபக், ஜெஃப்ரி, நடிகர் விஜே விஷால், முத்துக்குமரன், தொகுப்பாளினி ஜாக்குலின், நடிகை பவித்ரா ஜனனி, மகாராஜாவில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சாச்சனா, நடிகை சுனிதா, நடிகை அன்ஷிதா, தர்ஷா குப்தா, சௌந்தர்யா, ஆனந்தி, சத்யா, தர்ஷிகா உள்ளிட்டோர் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

க்யூட் மொமண்ட்: நேற்று நடந்த தொடக்க நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக தயாரிப்பாளர் ரவீந்தர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். அதனையடுத்து மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்து பிரபலமான சாச்சனா உள்ளே சென்றார். அவர் தொடக்க விழா மேடைக்கு வந்ததும் அவரும் விஜய் சேதுபதியும் பேசிக்கொண்டது செம க்யூட்டாக இருந்ததாக ரசிகர்கள் கூறினார்கள். மேலும் நன்றாக விளையாடிவிட்டு வா என்று வாழ்த்தியும் அனுப்பினார். 21 வயதாகும் அவருக்கு கண்டிப்பாக பிக்பாஸ் நல்ல பிளாட்பார்மாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

புதிய ரூல்: இதற்இடையே வீட்டின் நுழைவிலேயே நடுவில் ஒரு கோடு போடப்பட்டிருக்கிறது. அதேபோல் போட்டியாளர்கள் மூன்று பேராக படுக்கும்படி மெத்தை போட்டு ஒரு படுக்கையறையும், தனித்தனியாக படுக்கும்படி மெத்தைகள் போட்டு ஒரு படுக்கையறை என மொத்தம் இரண்டு பெட்ரூம்கள் இருக்கின்றன. மேலும் எப்போதும் இல்லாத மாதிரி இந்த முறை முதல் நாள் எவிக்‌ஷெனை கொண்டு வந்து பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தார் பிக்பாஸ். எனவே முதல் நாளில் யார் சிக்கப்போகிறார் என்ற ஆவல் ரசிகர்களிடம் இருந்தது.

சாச்சனா அவுட்: இந்நிலையில் பிக்பாஸ் ப்ரோமோ இன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி முதல் நாள் எவிக்‌ஷெனில் சிக்கி வீட்டிலிருந்து வெளியேறுகிறார் சாச்சனா. தான் எவிக்‌ஷென் ஆனதை அடுத்து உச்சக்கட்ட விரக்திக்கு சென்ற சாச்சனா முதல் நாளிலேயே வெளியேறுகிறோமே என்ற கோபத்திலும், சோகத்திலும் கையில் வைத்திருந்த பிக்பாஸ் போலி ட்ராஃபியை போட்டு உடைத்தார். முதல் நாளே 21 வயதான சாச்சனா வெளியேறியிருப்பது ரசிகர்களுக்கும்கொஞ்சம் அப்செட்டைத்தான் கொடுத்திருக்கிறது. விஜய் சேதுபதி இந்த வார இறுதியில் என்ன பேசுகிறார்; என்ன ரியாக்‌ஷன் கொடுக்கிறார் என்பதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X