twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் விருதில் புயலை கிளப்பிய செவ்விந்திய நாயகி சஷின் ..திடீர் மரணம்

    |

    ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் செவிந்தியர்களின் உரிமைக்குரலாக ஒலித்த செவ்விந்திய நாயகி நேற்றிரவு காலமானார்

    காட்ஃபாதர் படத்துக்காக தனக்களிக்கப்பட்ட ஆஸ்கர் விருதை புறக்கணித்த மார்லன் பிராண்டோவின் பிரதிநிதியாக விருது வழங்கும் விழாவில் மேடையேறி கர்ஜித்தவர் சச்சின் லிட்டில் ஃபெதர்.

    இதனால் ஒதுக்கி வைக்கப்பட்ட அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக 50 ஆண்டுகள் கழித்து ஆஸ்கர் கமிட்டி மன்னிப்பு கோரியது.

    Chhello Show: ஆர்ஆர்ஆர் இல்லை.. ஆஸ்கர் 2023க்கு இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் படம் இதுதான்! Chhello Show: ஆர்ஆர்ஆர் இல்லை.. ஆஸ்கர் 2023க்கு இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் படம் இதுதான்!

     ஹாலிவுட்டின் சிவாஜி மார்லன் பிராண்டோ

    ஹாலிவுட்டின் சிவாஜி மார்லன் பிராண்டோ

    தமிழில் வெளியாகிய நாயகன் மற்றும் பிற படங்களின் முன்னோடி படம் 1970 களில் ரிலீஸான ஹாலிவுட் படமான தி காட்ஃபாதர். ஒரு சாமானியன் எப்படி ஒரு மிகப்பெரிய தாதாவாக மாறுகிறான் என்பதான கதைகளின் முன்னோடி தி காட் ஃபாதர். இதில் காட்ஃபாதர் கேரக்டர் மிக சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கும். நாயகன் மார்லன் பிராண்டோவை ஹாலிவுட்டின் சிவாஜி எனலாம். அல்லது இப்படி சொல்லலாம் தமிழகத்தின் மார்லன் பிராண்டோ சிவாஜி என( இது சிவாஜிக்கு அண்ணா கொடுத்த பட்டம்). அப்படி ஒரு தோரணை, உடல் மொழி, நடிப்பு இருக்கும்.

     நாயகன் முதல் வெந்து தணிந்தது காடு வரை படங்களின் முன்னோடி தி காட்ஃபாதர்

    நாயகன் முதல் வெந்து தணிந்தது காடு வரை படங்களின் முன்னோடி தி காட்ஃபாதர்

    தி காட்ஃபாதர் படம் வெளியான பின் அதைப் பின்பற்றி தற்போது வெளியான வெந்து தணிந்தது காடு படம் வரை படங்கள் வெளிவந்துள்ளன. காட்ஃபாதர் படம் சக்கைப்போடு போட்டது. இதனால் 1973 ஆண்டு அதன் கதாநாயகன் மார்லன் பிராண்டோ உட்பட படத்துக்கு 3 ஆஸ்கர் விருதுகள் கிடைத்தது. அந்த விருது வழங்கும் நிகழ்ச்சி உலகெங்கும் பார்க்கப்பட்டது. ஆஸ்கர் அவார்டு அல்லவா. காட்ஃபாதர் படத்துக்காக மார்லன் பிராண்டோ சிறந்த நடிகராக அறிவிக்கப்பட்டிருந்தார். எல்லோரும் அவர் வரவை எதிர்ப்பார்த்து காத்திருக்க அவர் வரவில்லை. மார்லன் பிராண்டோவுக்கான விருதை அறிவிப்பாளர் (புகழ்பெற்ற ஜேம்ஸ்பாண்ட் நடிகர் ரோஜர் மூர் ) அறிவித்ததும் ஒரு செவ்விந்திய பெண் மேடை ஏறினார். அவர்தான் சச்சின் லிட்டில் ஃபெதர்.

     ஆஸ்கர் விருதை மறுத்த மார்லன் பிராண்டோ

    ஆஸ்கர் விருதை மறுத்த மார்லன் பிராண்டோ

    சச்சின் லிட்டில் ஃபெதர் ஹாலிவுட் நடிகையாக இருந்தும் ஹாலிவுட் திரையுலகம் செவ்விந்தியர்களை மூன்றாதர நடிகர்களாக நடத்தியதும் வரலாறு. செவ்விந்தியப் பெண்கள் அணியும் பாரம்பரிய உடையுடன் அவர் ஆஸ்கர் மேடையேறினார். தங்கள் இனத்தின் புறக்கணிப்பை மாபெரும் நடிகர் மார்லன் பிராண்டோ விருதை வாங்கும் மேடையில் அறிவிக்க ஏறினார். அவர் மேடை ஏறியதும் அனைவருக்கும் குழப்பம். ரோஜர் மூர் காட்ஃபாதருக்கு பதில் வந்த அவரிடம் ஆஸ்கர் விருதை அளிக்க முயன்றார். அவர் மறுத்துவிட்டு தன் கையிலிருந்த மார்லன் பிராண்டோவின் கடிதத்தின் ஒரு பகுதியை படித்தார்.

     ஆஸ்கர் விழா மேடையில் சச்சின் லிட்டில்ஃபெதர் கிளப்பிய புயல்

    ஆஸ்கர் விழா மேடையில் சச்சின் லிட்டில்ஃபெதர் கிளப்பிய புயல்

    "இந்த மாபெரும் விருது வழங்கும் விழாவில் மார்லன் பிராண்டோவின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன். இங்கு ஒரு விஷயத்தை அவர் அனைவரிடமும் சொல்லச் சொன்னார். தாராள மனதுடன் வழங்கப்படும் இந்த விருதை வாங்குவதை வருத்தத்துடன் அவர் மறுத்துவிட்டார். விருதை அவர் மறுக்கக் காரணம், ஹாலிவுட் திரைத் துறையில் செவ்விந்தியர்கள் மோசமாக நடத்தப்படுவதுதான்" என்று படித்து முடித்தார் சச்சின் ஃபெதர். அவ்வளவுதான் ஆஸ்கர் விழா அரங்கமே பரபரப்பானது. தங்கள் குட்டு வெளிப்பட்டதாக அமெரிக்க திரையுலகின் சிலர் அலறினர். சச்சின் லிட்டில்ஃபெதரை அடிக்கப்பாய்ந்தனர் (அடிக்க பாயும் அளவுக்கு செவ்விந்தியர் நிலை இருந்ததை உணர வேண்டும்)

     தனது கடிதம் மூலம் புயலைக் கிளப்பிய மார்லன் பிராண்டோ

    தனது கடிதம் மூலம் புயலைக் கிளப்பிய மார்லன் பிராண்டோ

    அமெரிக்க பூர்வகுடிகளை அழித்து தங்கள் வெள்ளை அரசாங்கத்தை அமைத்த அதிகாரிகள், கருப்பினத்தவர், செவ்விந்தியர்களை மூன்றாந்தர, நாலாந்தர மக்களாக நடத்தியதை மார்லன் பிராண்டோ போன்ற சமூக அக்கறையுள்ள மாபெரும் கலைஞனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்காகவே தன் சக கலைஞரான செவ்விந்திய இன பெண் சச்சின் லிட்டில் ஃபெதர் மூலம் ஆஸ்கர் விருதினை புறக்கணிக்கும் கடிதத்தை கொடுத்து காரணத்தையும் பதிவு செய்ய வைத்தார். சமீபத்தில் தான் ஒரு போராட்டத்தில் செவ்விந்தியர்கள் 2 பேர் நியாயமற்ற முறையில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வும் நடந்திருந்தது.

     சச்சின் லிட்டில் ஃபெதரிடம் 50 ஆண்டுகள் கழித்து மன்னிப்பு கோரிய

    சச்சின் லிட்டில் ஃபெதரிடம் 50 ஆண்டுகள் கழித்து மன்னிப்பு கோரிய

    சச்சின் லிட்டில் ஃபெதர் கடிதத்தை வாசித்ததை சிலர் எதிர்த்தாலும் பலர் அதை ஆமோதித்து வரவேற்றனர். இந்நிகழ்வு மூலம் கடைகோடி தமிழகம் வரை சச்சின் லிட்டில் ஃபெதர் அறியப்பட்டார். மார்லன் பிராண்டோ என்றாலோ, ஆஸ்கர் விருது என்றாலோ சச்சின் ஃபெதரும் ஞாபகத்துக்கு வருவார். என்ன இருந்து என்ன பயன் இந்நிகழ்வுக்கு பின் அவருக்கு பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டு மிக மோசமாக நடத்தப்பட்டார். வெள்ளையின வெறி கொண்ட திரைக்கலைஞர்களும் ரசிகர்களும் அவரைத் தொடர்ந்து இழிவுபடுத்திவந்தனர். ஆனாலும் அவர் மனம் தளரவில்லை. இந்நிகழ்வு நடந்து 50 ஆண்டுகள் கழித்து கடந்த ஜூன் மாதம் ஆஸ்கர் கமிட்டி தங்களது செயல்களுக்காக சச்சின் ஃபெதரிடம் மன்னிப்பு கோரியது. அவருக்கு விழாவும் எடுத்தது. அவர் அதை பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார்.

     செவிந்திய போராளி சச்சின் லிட்டில் ஃபெதர் நேற்றிரவு திடீர் மரணம்

    செவிந்திய போராளி சச்சின் லிட்டில் ஃபெதர் நேற்றிரவு திடீர் மரணம்

    கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சச்சின் லிட்டில் ஃபெதர் சிகிச்சைக்குப்பின் உடல் நலம் தேறிவந்த நிலையில் நேற்றிரவு காலமானார். அவரது மறைவு உலகெங்கும் உள்ள சினிமா நலம் விரும்பிகளுக்கு அதிர்ச்சியூட்டும் சம்பவமாக அமைந்துள்ளது. ஒடுக்குதல், புறக்கணிப்புகள் உலகெங்கும் சக மனிதர்களால் வெவ்வேறு வகைகளில் நடந்துக்கொண்டுத்தான் இருக்கிறது. நம் திரைத்துறையிலும் திருநங்கைகள், உருவக்கேலி, மாற்றுத்திறனாளிகள் குறித்த பார்வை தற்போது மாறியுள்ளது. இதற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டம் விழிப்புணர்வு தொடர்ச்சியாக நடத்தவேண்டும் என்பதை சச்சின் ஃபெதர்லைட் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.

    English summary
    The actress who was the voice of Red Indians at the Oscars passed away last night. Sacheen Littlefeather roared onto the stage at the awards ceremony representing Marlon Brando, who snubbed his Oscar for The Godfather. 50 years later the Oscar committee apologized for the injustice done to Sacheen Littlefeather who was thus excluded.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X