ரஜினிகாந்த் அருகே லதா ரஜினிகாந்துக்கு சீட் இல்லையா?.. பக்கத்துல யாரு உட்கார்ந்தா தெரியுமா?

அயோத்தி: ராமர் கோயில் திறப்பு விழா இன்று அயோத்தியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு முன் வரிசையில் அமரும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், அவர் அருகே லதா ரஜினிகாந்த் அமரவில்லை என்றும் ரஜினிகாந்தின் குடும்பத்தினருக்கு முன் வரிசையில் அமர இடம் ஒதுக்கப்படவில்லை என்றும் சர்ச்சை வெடித்துள்ளது.

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட பால ராமர் கோயில் திறப்பு விழா மற்றும் பால ராமரின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ராம்சரண், ரன்பீர் கபூர், அபிஷேக் பச்சன், ஆலியா பட், தனுஷ், கங்கனா ரனாவத், கத்ரீனா கைஃப், விக்கி கவுஷல் உள்ளிட்ட பல நடிகர்கள் பங்கேற்றனர்.

Sachin sit next to Rajinikanth and not Latha Rajinikanth at Ayodhya Temple?

முதல் வரிசையில் ரஜினிகாந்த்: ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்துக்கு முன் வரிசையில் அமர நாற்காலி ஒதுக்கப்பட்டு இருந்தது. சில நாட்களுக்கு முன்னதாக ராமர் கோயில் திறப்பு விழாவில் ரஜினிகாந்த் குடும்பத்துடன் கலந்து கொண்ட வேண்டும் என அவருக்கு பிரத்யேகமாக அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று சென்னையில் இருந்து அயோத்திக்கு புறப்பட்ட ரஜினிகாந்த் இன்று ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Sachin sit next to Rajinikanth and not Latha Rajinikanth at Ayodhya Temple?

லதா ரஜினிகாந்துக்கு இடம் இல்லையா?: ரஜினிகாந்த் உடன் லதா ரஜினிகாந்த் அயோத்திக்கு சென்றிருந்தார். மேலும், நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் அயோத்திக்கு சென்றிருந்தார். ஆனால், முன் வரிசையில் ரஜினிகாந்த் மட்டுமே அமர்ந்திருந்த காட்சிகள் வெளியாகின. மேலும், நடிகர் ரஜினிகாந்த் விழா ஏற்பாட்டாளர்களிடம் ஏதோ பேசுவது போன்ற காட்சிகளும் வெளியாகி இருந்தன. இந்நிலையில், ரஜினிகாந்த் அருகே லதா ரஜினிகாந்துக்கு இடம் ஒதுக்கப்படவில்லையா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Sachin sit next to Rajinikanth and not Latha Rajinikanth at Ayodhya Temple?

பக்கத்தில் சச்சின்: கிரிக்கெட் உலகின் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கர் ரஜினிகாந்த் அருகே வந்து அமர்ந்த காட்சிகளும் வெளியாகி உள்ளன. இருவரும் ஒருவருக்கொருவர் ஃபேன் என்பதால் ஒன்றாக பேசிய காட்சிகளும் சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.

வரவேற்ற முகேஷ் அம்பானி: முதல் வரிசையில் அமர்ந்திருந்த ரஜினிகாந்தை பார்த்ததும் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நிதா அம்பானி இருவரும் ரஜினிகாந்த் அருகே வந்து வணக்கம் தெரிவித்து வரவேற்ற காட்சிகளும் வெளியாகி உள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வடக்கில் எந்தளவுக்கு செல்வாக்கு இருக்கு என பாருங்க என அவரது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X