திருமணத்தில் ஒருவழியா சிரிச்ச சச்சின் மகன்.. ஷாருக்கான் முதல் ஐஸ்வர்யா ராய் என ஸ்டார்ஸ் படையெடுப்பு!
மும்பை: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும், ஆல்-ரவுண்டருமான அர்ஜுன் டெண்டுல்கர், தொழிலதிபர் சானியா சந்தோக்கை மும்பையில் மார்ச் 5, 2026ம் தேதி கோலாகலமாகத் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
அர்ஜுன் டெண்டுல்கர் அப்பாவை போலவே இன்ட்ரோவெர்ட் என்றும் சிரிக்கவே மாட்டேங்கிறாரே என ரசிகர்கள் கலாய்த்த நிலையில், கடைசியாக சானியா கழுத்தில் மாலை போடும் போது சிரித்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு மாறி, தற்போது கோவா அணிக்காக விளையாடி வரும் அர்ஜுன், திறமையான பந்துவீச்சு ஆல்-ரவுண்டராகத் தனி முத்திரை பதித்துள்ளார். அர்ஜுனும் சானியாவும் கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
சானியா சந்தோக், புகழ்பெற்ற குடும்பப் பின்னணியைக் கொண்ட இளம் தொழிலதிபர் ஆவார். மும்பையின் பிரபல தொழிலதிபர் ரவி காயின் பேத்தியான இவர், டெண்டுல்கர் குடும்பத்துடன் நீண்டகாலமாகவே நெருங்கிய நட்பில் இருந்து வருகிறார்.

இந்த திருமண விழாவில் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ். தோனி, ஷாருக்கான், அம்பானி, ஐஸ்வர்யா ராய், அமீர்கான், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். தனது மகனின் திருமணத்தில் அளவற்ற மகிழ்ச்சியுடன் காணப்பட்ட சச்சின், மணமக்கள் மீது மலர்களைத் தூவி, புன்னகையுடன் தனது அன்பை வெளிப்படுத்திய தருணம் அனைவரையும் கவர்ந்தது.
முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனி, தனது மனைவி சாக்ஷியுடன் திருமண விழாவில் பங்கேற்றார். பொதுவாக தனது கைபேசியை அதிகம் பயன்படுத்தாதவர் என்று அறியப்படும் தோனி, விழாவின்போது அதனை கைகளில் வைத்திருந்த அரிய காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. பாலிவுட் நடிகர்கள் எல்லாம் தங்கள் குடும்பத்தினருடன் வண்ண உடைகளை அணிந்து வந்து மணமக்களை வாழ்த்திய காட்சிகள் வைரலாகி வருகின்றன.
திருமணத்திற்கு முன்னதாக மெஹந்தி மற்றும் சங்கீத் விழாக்களும் களைகட்டின. அர்ஜுனின் சகோதரி சாரா டெண்டுல்கர் சங்கீத் விழாவில் ஆனந்தமாக நடனமாடி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார்.
இந்த விழாக்களில் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, பிரகாசமான ஊதா நிறத்தில் வடிவமைக்கப்பட்ட ஆடை மற்றும் விலைமதிப்பற்ற போல்கி வைர ஆபரணங்களுடன் பங்கேற்று சிறப்பு சேர்த்தார். பிரபல ஆடையலங்கார நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட இந்த ஆடைகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தன.
ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா திருமணத்தைத் தொடர்ந்து அர்ஜுன் டெண்டுல்கர் திருமணம் பிரபலங்கள் மத்தியில் களைகட்டியது. மார்ச் 6ம் தேதி அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் திருமணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











