கனா படத்தில் சச்சின் டெண்டுல்கர்.... இயக்குனர் அருண்ராஜா காமராஜ் சொன்ன சீக்ரெட்!
Recommended Video

சென்னை: கனா படத்தில் சச்சின் டெண்டுல்கல் நடித்துள்ளதாக இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கூறினார்.
பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தில் உருவாகியுள்ள கனா திரைப்படம் வரும் 21ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ், கனாவில் சச்சின் டெண்டுல்கர் நடித்துள்ளதாகக் கூறினார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, "பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தபோதே, இதுவரை எந்த படத்திலும் வராத வகையில் ஒரிஜினலாக கிரிக்கெட் போட்டியை காட்ட வேண்டும் என திட்டமிட்டோம்.
படத்தில் கடைசி அரை மணி நேரம் ஒரிஜினலான கிரிக்கெட் போட்டி நடைபெறும். அதற்காக ஒளிப்பதிவாளர் தினேஷ் உள்பட ஏராளமான தொழில்நுட்ப கலைஞர்கள் மிக கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் கௌசல்யா முருகேசன் என்ற கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். அவருக்கு உறுதுணையாக கௌசிக் பாய்ஸ் பாத்திரம் வரும். அதில் சச்சின் டெண்டுல்கர் நடித்துள்ளனர்.
சச்சின் என்பது ஒருவர், டெண்டுல்கர் என்பவர் மற்றொருவர். சவரிமுத்து சச்சினாகவும், அந்தோணி பாக்யராஜ் டெண்டுல்கராகவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவர் உள்பட கௌசிக் பாய்ஸ் அனைவரும் தான் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கடைசிவரை உறுதுணையாக நிற்பவர்கள்" எனக் கூறினார்.


Click it and Unblock the Notifications











