பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.. சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு தமிழில் வாழ்த்து சொன்ன சச்சின் டெண்டுல்கர்!

சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் தமிழில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் 70வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பல துறைகளை சார்ந்த பிரபலங்களும் ஸ்டைல் சாம்ராட்டுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ரஜினிகாந்துக்கு தமிழில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சச்சின் வாழ்த்து

சினிமா மட்டுமின்றி, அரசியல், விளையாட்டு என பல துறைகளிலும் நடிகர் ரஜினிகாந்துக்கு நெருங்கிய நண்பர்களும், பல பிரபலங்கள் அவரது ரசிகர்களாகவும் இருக்கின்றனர். கிரிக்கெட் உலகின் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், சற்று முன் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ரஜினிகாந்த் சார்.. என தமிழில் வாழ்த்தியுள்ளார்.

தலைவா

தலைவா

அதுமட்டுமின்றி, உங்களின் ஆன் ஸ்க்ரீன் ஸ்டைல் மற்றும் ஆஃப் ஸ்க்ரீன் பண்பு தான் உங்களை ஒவ்வொரு தர்பாரிலும் தலைவாவாக மாற்றியுள்ளது என சச்சின் டெண்டுல்கர் மனதார பாராட்டியுள்ளார்.

நன்றி

மாஸ்டர் பிளாஸ்டரின் இந்த வாழ்த்தை பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ள ரஜினி ரசிகர்கள், ரஜினிகாந்த் சார்பில் அவருக்கு தங்களது நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.

தர்பாருக்கு வெயிட்டிங்

நன்றி சச்சின் ஜி, நீங்களும் எங்களை போல தர்பார் வெளியீட்டிற்கு காத்திருக்கிறீர்கள் என்பதை அறியும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என இந்த ரசிகர் பதிவிட்டுள்ளார்.

காட் ஆஃப் சினிமா

கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் சினிமாவின் கடவுள் ரஜினிகாந்தை வாழ்த்தியுள்ளார். நன்றி சச்சின் என இந்த ரஜினி ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

ஆல் டைம் ஃபேவரைட்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு விழா மேடையில் மிர்ச்சி சிவா கேட்ட கேள்விக்கு, தனது ஆல் டைம் ஃபேவரைட் சச்சின் டெண்டுல்கர் எனக் கூறும் வீடியோ க்ளிப்பை சச்சின் ட்வீட்டுக்கு கீழே பதிவிட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X