twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாடல் கட்: நிபந்தனையுடன் ரிலீஸான சச்சின் விஜய்க்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்கள் சச்சின் படத்தின் பாடலுக்குத் தடை விதித்து, அந்தப் படத்தை திரையிட உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது.இதையடுத்து அந்தப் படம் திட்டமிட்டபடி நேற்று வெளியானது.சச்சின் படத்தில் எங்கள் படத்தின் பாடலை சுட்டு டியூன் போட்டு விட்டார்கள் என ஆந்திர திரைப் படத் தயாரிப்பாளர் ஒருவர் வழக்குத்தொடர்ந்தார்.சிரஞ்சீவி நடித்து வெளியான "சங்கர்தாதா எம்.பி.பி.எஸ். (வசூல்ராஜாவின் தெலுங்கு ரீமேக்) படத்தை தயாரித்த ஜெமினி பிலிம் சர்க்யூட்நிறுவனத்தைச் சேர்ந்த பாப்பய்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்,நாங்கள் தயாரித்த "சங்கர்தாதா எம்.பி.பி.எஸ். படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் தான் இசையமைத்தார். அவரே தற்போது சச்சின் படத்திற்கும்இசையமைத்துள்ளார். "சங்கர்தாதா எம்.பி.பி.எஸ். படத்தில் வரும் "நா பேரு காஞ்சனமாலா என்ற பாடலுக்கான ட்யூனை, அப்படியே அச்சுப் பிசகாமல், சச்சின்படத்தில் வரும் " டேய் டேய் டேய் கட்டிக்கோடா என்ற பாடலுக்கு தேவி ஸ்ரீபிரசாத் பயன்படுத்தியுள்ளார். எனவே படத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த மனுவை நீதிபதி கண்ணதாசன் விசாரித்தார். அப்போது சச்சின் படத் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணுவின் சார்பில் ஆஜரானவழக்கறிஞர் சுப்பிரமணியம்,சங்கர் தாதாவில் 8 பாடல்களுக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்தார். அதற்கு அவருக்கு ரூ. 30 லட்சம் ஊதியமாகத் தரப்பட்டது. எங்கள்படத்தில் ஒரு பாடலை மட்டும் பயன்படுத்தியிருக்கிறோம். அதற்காக ரூ. 5 லட்சம் வேண்டுமானால் டெபாசிட் செய்கிறோம் என்றார்.இதை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனத்தின் வழக்கறிஞர் ராமனுஜம் ஏற்கவில்லை. ரூ. 60 லட்சம் தர வேண்டும், இல்லாவிட்டால்படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்றார்.சுப்பிரமணியம்: தெலுங்கில் அந்தப் படமே பிளாப் ஆகிவிட்டது. இந் நிலையில் இவ்வளவு பணம் கேட்பது நியாமல்ல. அலங்கரிக்கப்பட்ட தியேட்டர் ராமானுஜம்: படத்தின் இசை வெற்றி பெற்றது. பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின.இதையடுத்து இரு படங்களின் பாடல்களையும் ஆடியோ கேசட்டில் போட்டுக் கேட்டார் நீதிபதி. இதையடுத்து இரு தரப்பினரும் கலந்துபேசுமாறு நீதிபதி அறிவுறுத்தினார். அரை மணி நேரம் ஆலோசனை நடத்திவிட்டு வந்த அவர்கள் மீண்டும் விவாதத்தைத் தொடங்கினர்.சுப்பிரமணியம்: வேண்டுமானால் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்கிறோம்.ராமானுஜம்: நாங்கள் வேண்டுமானால் ரூ. 15 லட்சம் தருகிறோம். அதை வாங்கிக் கொண்டு சச்சின் படத்தை ரிலீஸ் செய்யாமல்இருங்களேன்.விஜய்க்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்கள்

    By Staff
    |
    விஜய்க்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்கள்

    சச்சின் படத்தின் பாடலுக்குத் தடை விதித்து, அந்தப் படத்தை திரையிட உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது.இதையடுத்து அந்தப் படம் திட்டமிட்டபடி நேற்று வெளியானது.

    சச்சின் படத்தில் எங்கள் படத்தின் பாடலை சுட்டு டியூன் போட்டு விட்டார்கள் என ஆந்திர திரைப் படத் தயாரிப்பாளர் ஒருவர் வழக்குத்தொடர்ந்தார்.

    சிரஞ்சீவி நடித்து வெளியான "சங்கர்தாதா எம்.பி.பி.எஸ். (வசூல்ராஜாவின் தெலுங்கு ரீமேக்) படத்தை தயாரித்த ஜெமினி பிலிம் சர்க்யூட்நிறுவனத்தைச் சேர்ந்த பாப்பய்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்,

    நாங்கள் தயாரித்த "சங்கர்தாதா எம்.பி.பி.எஸ். படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் தான் இசையமைத்தார். அவரே தற்போது சச்சின் படத்திற்கும்இசையமைத்துள்ளார்.


    "சங்கர்தாதா எம்.பி.பி.எஸ். படத்தில் வரும் "நா பேரு காஞ்சனமாலா என்ற பாடலுக்கான ட்யூனை, அப்படியே அச்சுப் பிசகாமல், சச்சின்படத்தில் வரும் " டேய் டேய் டேய் கட்டிக்கோடா என்ற பாடலுக்கு தேவி ஸ்ரீபிரசாத் பயன்படுத்தியுள்ளார். எனவே படத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரியிருந்தார்.

    இந்த மனுவை நீதிபதி கண்ணதாசன் விசாரித்தார். அப்போது சச்சின் படத் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணுவின் சார்பில் ஆஜரானவழக்கறிஞர் சுப்பிரமணியம்,

    சங்கர் தாதாவில் 8 பாடல்களுக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்தார். அதற்கு அவருக்கு ரூ. 30 லட்சம் ஊதியமாகத் தரப்பட்டது. எங்கள்படத்தில் ஒரு பாடலை மட்டும் பயன்படுத்தியிருக்கிறோம். அதற்காக ரூ. 5 லட்சம் வேண்டுமானால் டெபாசிட் செய்கிறோம் என்றார்.

    இதை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனத்தின் வழக்கறிஞர் ராமனுஜம் ஏற்கவில்லை. ரூ. 60 லட்சம் தர வேண்டும், இல்லாவிட்டால்படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்றார்.

    சுப்பிரமணியம்: தெலுங்கில் அந்தப் படமே பிளாப் ஆகிவிட்டது. இந் நிலையில் இவ்வளவு பணம் கேட்பது நியாமல்ல.

    அலங்கரிக்கப்பட்ட தியேட்டர்

    ராமானுஜம்: படத்தின் இசை வெற்றி பெற்றது. பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின.

    இதையடுத்து இரு படங்களின் பாடல்களையும் ஆடியோ கேசட்டில் போட்டுக் கேட்டார் நீதிபதி. இதையடுத்து இரு தரப்பினரும் கலந்துபேசுமாறு நீதிபதி அறிவுறுத்தினார். அரை மணி நேரம் ஆலோசனை நடத்திவிட்டு வந்த அவர்கள் மீண்டும் விவாதத்தைத் தொடங்கினர்.

    சுப்பிரமணியம்: வேண்டுமானால் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்கிறோம்.

    ராமானுஜம்: நாங்கள் வேண்டுமானால் ரூ. 15 லட்சம் தருகிறோம். அதை வாங்கிக் கொண்டு சச்சின் படத்தை ரிலீஸ் செய்யாமல்இருங்களேன்.

    விஜய்க்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்கள்
    இதையடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி கண்ணதாசன் கூறியதாவது:

    டேய் டேய் டேய் கட்டிபிடிடா பாடலில் தற்போதுள்ள இசை, பின்னணி இசை இல்லாமல் சச்சின் படத்தை திரையிடலாம். வேண்டுமானால்வேறு இசையை இந்தப் படத்துக்கு பயன்படுத்தலாம். இதன் அடிப்படையில் சச்சின் படம் திரையிட அனுமதிக்கப்படுகிறது என்றார்.

    இது குறித்து சச்சின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு கூறுகையில்,

    படம் திட்டமிட்டபடி வெளியாகும். முதல் 2 நாட்கள் டேய் டேய் பாட்டுக்குரிய காட்சிகள் படத்தில் இடம் பெறாது. அதற்குள் புது மெட்டுபோட்டு பாடல் காட்சியை படத்தில் சேர்ப்போம் என்றார்.

    இதனால் இந்த பாடல் கட் செய்யப்பட்டு நேற்று படம் ரிலீஸ் ஆனது. நாளை அல்லது மறுதினத்துக்குள் புதிய இசையுடன் இந்தப் பாடல்படத்தில் சேர்க்கப்படும் என்று தெரிகிறது.

    ரஜினி ரசிகர்களுக்கு இணையாக விஜய்யின் ரசிகர்களும் அவரது கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், பூ மாலைகள் தூவியும்பக்தியை வெளிப்படுத்தினர். திரையில் விஜய் தோன்றும்போதெல்லாம் கையிலேயே கற்பூரம் எரித்து அதைக் காட்டி பூரித்துப்போனார்கள் அந்த கை புண்ணான ரசிகர்கள்.

      Read more about: vijays sachin also released
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X