»   »  சச்சின்: வழக்கில் சிக்கிய இன்னொரு பாட்டு சச்சின் படத்தில் இடம் பெற்றுள்ள "குண்டு மாங்காத் தோப்புக்குள்ளே பாடலின் மெட்டு தங்களுக்கே சொந்தம் என்று கூறிதெலுங்குப் பட அதிபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.விஜய் நடித்து தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியாகியுள்ள படம் சச்சின். இதில் இடம் பெற்ற "கட்டிக்கோடா என்ற பாடல் மெட்டுதங்களுக்கு சொந்தமானது என்று கூறி பட ரிலீஸுக்கு முன்பு தெலுங்குப் பட அதிபர் ஒருவர் வழக்குத் தொடர்ந்து அந்தப்பாடலுக்குத் தடையுத்தரவு வாங்கினார்.இதையடுத்து வேறு மெட்டில் அப்பாடலை பதிவு செய்து படத்தில் சேர்த்தார்கள். இந் நிலையில் சச்சின் படத்தில் வரும் இன்னொருபாட்டுக்கும் பிரச்சினை வந்துள்ளது."குண்டு மாங்காத் தோப்புக்குள்ளே என்ற பாடலின் மெட்டு தங்களுக்கே சொந்தமானது என்று கூறி தெலுங்குப் பட அதிபர் சுப்பாரெட்டி என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.தனது மனுவில், நான் தெலுங்கில் தயாரித்த ஊர்ஸ் அபி என்ற படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்தார். அவரது இசையில்"வங்கத் தோட்ட மலுப்பு காடா என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது.இதே மெட்டையே தற்போது சச்சின் படத்தில் தேவி ஸ்ரீபிரசாத் பயன்படுத்தியுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில்,பாடலின் மெட்டும் எங்களுக்கே சொந்தமானது. எனவே எங்களது பாடல் மெட்டில் தமிழ்ப் பாட்டை பயன்படுத்த தடை விதிக்கவேண்டும். ரூ. 30லட்சம் நஷ்ட ஈடு தர உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.மனுவை விசாரித்த நீதிபதி அசோக் குமார், இரு படங்களின் பாட்டுக்களையும் போடச் சொல்லி கேட்டார். பின்னர் குண்டுமாங்காத் தோப்புக்குள்ளே பாடலின் மெட்டை இனி வேறு மொழியில் டப் செய்ய மாட்டோம் என்று சச்சின் பட அதிபர்தரப்பிலிருந்து உறுதி மொழியை பெற்றார்.அதன் பின்னர் வழக்கு விசாரணை ஜூலை 7ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

சச்சின்: வழக்கில் சிக்கிய இன்னொரு பாட்டு சச்சின் படத்தில் இடம் பெற்றுள்ள "குண்டு மாங்காத் தோப்புக்குள்ளே பாடலின் மெட்டு தங்களுக்கே சொந்தம் என்று கூறிதெலுங்குப் பட அதிபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.விஜய் நடித்து தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியாகியுள்ள படம் சச்சின். இதில் இடம் பெற்ற "கட்டிக்கோடா என்ற பாடல் மெட்டுதங்களுக்கு சொந்தமானது என்று கூறி பட ரிலீஸுக்கு முன்பு தெலுங்குப் பட அதிபர் ஒருவர் வழக்குத் தொடர்ந்து அந்தப்பாடலுக்குத் தடையுத்தரவு வாங்கினார்.இதையடுத்து வேறு மெட்டில் அப்பாடலை பதிவு செய்து படத்தில் சேர்த்தார்கள். இந் நிலையில் சச்சின் படத்தில் வரும் இன்னொருபாட்டுக்கும் பிரச்சினை வந்துள்ளது."குண்டு மாங்காத் தோப்புக்குள்ளே என்ற பாடலின் மெட்டு தங்களுக்கே சொந்தமானது என்று கூறி தெலுங்குப் பட அதிபர் சுப்பாரெட்டி என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.தனது மனுவில், நான் தெலுங்கில் தயாரித்த ஊர்ஸ் அபி என்ற படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்தார். அவரது இசையில்"வங்கத் தோட்ட மலுப்பு காடா என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது.இதே மெட்டையே தற்போது சச்சின் படத்தில் தேவி ஸ்ரீபிரசாத் பயன்படுத்தியுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில்,பாடலின் மெட்டும் எங்களுக்கே சொந்தமானது. எனவே எங்களது பாடல் மெட்டில் தமிழ்ப் பாட்டை பயன்படுத்த தடை விதிக்கவேண்டும். ரூ. 30லட்சம் நஷ்ட ஈடு தர உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.மனுவை விசாரித்த நீதிபதி அசோக் குமார், இரு படங்களின் பாட்டுக்களையும் போடச் சொல்லி கேட்டார். பின்னர் குண்டுமாங்காத் தோப்புக்குள்ளே பாடலின் மெட்டை இனி வேறு மொழியில் டப் செய்ய மாட்டோம் என்று சச்சின் பட அதிபர்தரப்பிலிருந்து உறுதி மொழியை பெற்றார்.அதன் பின்னர் வழக்கு விசாரணை ஜூலை 7ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

சச்சின் படத்தில் இடம் பெற்றுள்ள "குண்டு மாங்காத் தோப்புக்குள்ளே பாடலின் மெட்டு தங்களுக்கே சொந்தம் என்று கூறிதெலுங்குப் பட அதிபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

விஜய் நடித்து தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியாகியுள்ள படம் சச்சின். இதில் இடம் பெற்ற "கட்டிக்கோடா என்ற பாடல் மெட்டுதங்களுக்கு சொந்தமானது என்று கூறி பட ரிலீஸுக்கு முன்பு தெலுங்குப் பட அதிபர் ஒருவர் வழக்குத் தொடர்ந்து அந்தப்பாடலுக்குத் தடையுத்தரவு வாங்கினார்.

இதையடுத்து வேறு மெட்டில் அப்பாடலை பதிவு செய்து படத்தில் சேர்த்தார்கள். இந் நிலையில் சச்சின் படத்தில் வரும் இன்னொருபாட்டுக்கும் பிரச்சினை வந்துள்ளது.

"குண்டு மாங்காத் தோப்புக்குள்ளே என்ற பாடலின் மெட்டு தங்களுக்கே சொந்தமானது என்று கூறி தெலுங்குப் பட அதிபர் சுப்பாரெட்டி என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தனது மனுவில், நான் தெலுங்கில் தயாரித்த ஊர்ஸ் அபி என்ற படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்தார். அவரது இசையில்"வங்கத் தோட்ட மலுப்பு காடா என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது.

இதே மெட்டையே தற்போது சச்சின் படத்தில் தேவி ஸ்ரீபிரசாத் பயன்படுத்தியுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில்,பாடலின் மெட்டும் எங்களுக்கே சொந்தமானது. எனவே எங்களது பாடல் மெட்டில் தமிழ்ப் பாட்டை பயன்படுத்த தடை விதிக்கவேண்டும். ரூ. 30லட்சம் நஷ்ட ஈடு தர உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி அசோக் குமார், இரு படங்களின் பாட்டுக்களையும் போடச் சொல்லி கேட்டார். பின்னர் குண்டுமாங்காத் தோப்புக்குள்ளே பாடலின் மெட்டை இனி வேறு மொழியில் டப் செய்ய மாட்டோம் என்று சச்சின் பட அதிபர்தரப்பிலிருந்து உறுதி மொழியை பெற்றார்.

அதன் பின்னர் வழக்கு விசாரணை ஜூலை 7ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil