அட இது நல்லாருக்கே.. 'அய்யப்பனும் கோஷியும்' தமிழ் ரீமேக்கிற்கு அந்த ஹீரோக்களை பரிந்துரைத்த சச்சி!

By

கொச்சி: அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்கிற்கு பிரபல ஹீரோக்களை, மறைந்த இயக்குனர் சச்சி பரிந்துரைத்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம், 'அய்யப்பனும் கோஷியும்'. பிருத்விராஜ், பிஜூமேனன் நடித்திருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.

பிருத்விராஜ், முன்னாள் ராணுவ வீரராகவும் பிஜூ மேனன் லோக்கல் சப் இன்ஸ்பெக்டராகவும் நடித்திருந்தனர்.

டிரைவிங் லைசன்ஸ்

டிரைவிங் லைசன்ஸ்

இதை இயக்கியவர் சச்சி என்ற கே.ஆர்.சச்சிதானந்தம். இந்தப் படம் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்தப் படம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தபோதுதான் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ரீமேக் ஆக இருக்கிறது. தமிழில் இதன் ரீமேக் உரிமையை ஆடுகளம், பொல்லாதவன், ஜிகிர்தண்டா படங்களின் தயாரிப்பாளர் கதிரேசன் வாங்கியுள்ளார்.

அறுவைச் சிகிச்சை

அறுவைச் சிகிச்சை

இந்தியில் இதன் ரீமேக் உரிமையை பிரபல நடிகர் ஜான் ஆபிரஹாம் வாங்கி இருக்கிறார். இந்நிலையில் இடுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை பெற்று வந்த சச்சி, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று மரணமடைந்தார். அவரது மறைவு கேரள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மலையாள சினிமாவின் முக்கியமான, ஸ்கிரிப்ட் டைரட்டர் மற்றும் இயக்குனரை இழந்துவிட்டோம் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.

Recommended Video

Ayyappanum Koshiyum director Sachy Passed Away | Filmibeat Tamil
வழக்கறிஞர்

வழக்கறிஞர்

மறைந்த இயக்குனர் சச்சி, கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தவர். சினிமா ஆசையில் ஸ்கிரிப்ட் ரைட்டர் ஆனார். ஆரம்பத்தில் சேது என்பவருடன் இணைந்து சில படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதி வந்தார். பின்னர் அவரிடம் இருந்து பிரிந்து தனியாக ஸ்கிரிப்ட் எழுதினார். திலீப் நடித்த ராம்லீலா, பிருத்விராஜ் நடித்த டிரைவிங் லைசன்ஸ் உட்பட சில படங்களுக்கு எழுதினார். டிரைவிங் லைசன்ஸ் கவனிக்கப்பட்டது.

பரிந்துரைத்த தகவல்

பரிந்துரைத்த தகவல்

அனார்கலி என்ற படம் மூலம் இயக்குனர் ஆன சச்சி, அடுத்து அய்யப்பனும் கோஷியும் படத்தை இயக்கினார். இந்தப் படம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் இந்தி ரீமேக்கிற்கு சச்சி சில நடிகர்களை பரிந்துரைத்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது. இதுபற்றி மலையாள இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார்.

கோஷியாக கார்த்தி

கோஷியாக கார்த்தி

அதில், 'யாரை நடிக்க வைக்க வேண்டும் என்பது அந்த தயாரிப்பாளர்களின் உரிமைதான். இந்தப் படம் வெளியானதும் தமிழ் சினிமாவில் இருந்து பலர், பாராட்டுகளைத் தெரிவித்தார்கள். அதில் ஒருவர், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில், என் சாய்ஸில், கோஷி கேரக்டருக்கு கார்த்தி பொருத்தமாக இருப்பார்.

நானா படேகர்

நானா படேகர்

அய்யப்பன் நாயர் கேரக்டருக்கு நடிகர் பார்த்திபன், அழகாக பொருந்துவார். பார்த்திபன் சுவாரஸ்யமான நடிகர். சில வருடங்களாக அவரை ஆழமாகக் கவனித்து வருகிறேன். இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் கோஷியாக, ஜான் ஆபிரஹாமும் அய்யப்பன் கேரக்டருக்கு நானா படேகரும் சரியாக இருப்பார்கள்' என்று தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டி, இப்போது மலையாளத்தில் பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X