கிளம்பிய புது சிக்கல்..வாத்தி பட ரிலீஸ் தேதியை மாற்றிய படக்குழுவினர்..பெரும் ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

சென்னை: தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்கள் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாகியிருந்தன.

அதனைத் தொடர்ந்து தனுஷ் நடித்துள்ள வாத்தி படம் டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், வாத்தி படத்தின் ரிலீஸ் தேதியில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிம்பு – தனுஷ் மோதல்

சிம்பு – தனுஷ் மோதல்

தனுஷுக்கு இந்தாண்டு ஓடிடி, தியேட்டர் என இரண்டிலும் சூப்பர் படங்கள் வெளியாகின. ஹாலிவுட்டில் தனுஷ் நடித்திருந்த தி கிரே மேன் படம், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. அதனைத் தொடர்ந்து திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்கள் திரையரங்குகளில் ரிலீஸாகி மாஸ் காட்டின. இதில், திருச்சிற்றம்பலம் படம் தனுஷ்க்கு வசூல் ரீதியாகவும், நானே வருவேன் படத்தில் அவரின் நடிப்புக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இந்நிலையில், தனுஷின் வாத்தி, சிம்புவின் பத்து தல படங்கள் டிசம்பர் ரேஸில் மோதவிருந்தன.

பின் வாங்கிய பத்து தல

பின் வாங்கிய பத்து தல

தனுஷின் வாத்தி டிசம்பர் 2ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதேபோல், சிம்புவின் பத்து தல திரைப்படம், டிசம்பர் 14ம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டது. இந்நிலையில், சிம்புவின் பத்து தல ரிலீஸ் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 14ம் தேதி வெளியாகவிருந்த இந்தப் படம் அடுத்தாண்டு ரிலீஸாகலாம் என சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் வாத்தி ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என்று ஜிவி பிரகாஷ் ட்வீட் செய்திருந்தார். இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர்.

ரிலீஸ் தேதியில் மாற்றம்

ரிலீஸ் தேதியில் மாற்றம்

இந்நிலையில், கடந்த சில தினங்களாக வாத்தி படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கும் எனவும் செய்திகள் வெளியாகின. அது தற்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதன்படி தனுஷின் வாத்தி அடுத்தாண்டு பிப்ரவரியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. தனுஷின் வாத்தி தெலுங்கில் 'சார்' என்ற டைட்டிலும் உருவாகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வாத்தி வெளியாகவிருந்தது. ஆனால், டிசம்பரில் தெலுங்கில் அதிகமான படங்கள் வெளியாகவிருப்பதால், திரையரங்குகளில் கிடைப்பதில் பிரச்சினை உள்ளதாம். அதனால், வாத்தி ரிலீஸ் தேதியை பிப்ரவரிக்கு மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

வாத்தி கதை

வாத்தி கதை

வெங்கி அட்லூரி இயக்கும் வாத்தி படத்தில் தனுஷ் ஆசிரியராக நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், தனுஷுக்கு இந்தப் படத்தில் இரட்டை பாத்திரங்கள் என்றும் கூறப்படுகிறது. தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க, சாய்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கல்வியை பின்னணியாக வைத்து அதில் காணப்படும் அரசியலை பேசும் படமாக வாத்தி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தனுஷின் வாத்தி ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என்ற தகவலால், அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X