விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி... மெர்சல் அவ்ளோதான்!
சென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்த 'மெர்சல்' படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகி இருந்தது. வசூலில் மாபெரும் சாதனை படைத்த 'மெர்சல்' இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி வெளியாகி இருக்கிறது. சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான ரோஹினி திரையரங்கில் இதுநாள் வரை மெர்சல் படம் பிரம்மாண்டமாக ஓடிக் கொண்டிருந்தது.

ஆனால் இதோடு 'மெர்சல்' படத்தை திரையிடுவது நிறுத்தப்பட்டுள்ளதாக ரோஹினி திரையரங்க உரிமையாளர் ரேவந்த் சரண் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தைக் கொடுத்துள்ளது. அண்மையில் மெர்சல் படத்தின் 50-வது நாள் விழா இந்தத் திரையரங்கில் ரசிகர்களால் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய படங்களின் வருகையால், 'மெர்சல்' படத்தை தூக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு நாள் ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தியேட்டர் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











