ஒரு லாஜிக்கும் இல்ல.. சுத்த வேஸ்ட்.. நடிகையால் வந்த சோதனை.. சடக் 2வை கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்!

மும்பை: ஆலியா பட் நடிப்பில் வெளியாகியுள்ள சடக் 2 படத்தை துப்பாத குறையாக கழுவி ஊற்றியுள்ளனர் நெட்டிசன்கள்.

சஞ்சய் தத், பூஜா பட், ஆலியா பட் மற்றும் ஆதித்யா ராய் கபூர், குல்ஷன் குரோவர், மகரந்த் தேஷ்பாண்டே உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியாகியுள்ள படம் சடக் 2.

இந்தப் படத்தை முகேஷ் பட்டின் விஷேஸ் ஃபிலிம்ஸ் பேனர் தயாரித்துள்ளர். இப்படத்தை மகேஷ் பட் இயக்கியுள்ளார்.

மோசமான சாதனை

மோசமான சாதனை

ஏற்கனவே இப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி, 12 மில்லியன் டிஸ்லைக்களை பெற்றது. இதன் மூலம் உலகிலேயே அதிக டிஸ்லைக்குகளை பெற்ற ட்ரெயிலர் என்ற மோசமான சாதனையை படைத்தது. இந்நிலையில்
நேற்று மாலை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்தப் படம் வெளியானது.

மோசமான படம்

மோசமான படம்

இதனை பார்த்த ரசிகர்கள் துப்பாத குறையாக கழுவி ஊற்றியுள்ளனர். படத்தில் எந்த லாஜிக்கும் இல்லை, மோசமான நடிப்பு, போரிங் என வாய்க்கு வந்தப்படி வசை பாடியுள்ளனர். இந்த ஆண்டில் வெளியான மோசமான படம் இதுதான் என்றும் வெறுப்பாக கூறியுள்ளனர்.

உலக சாதனை படைக்கும்

உலக சாதனை படைக்கும்

மேலும் ஐஎம்டிபியில் இந்தப் படத்திற்கு ரேட்டிங்காக ஒரு ஸ்டார் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை குறிப்பிட்டும் நெட்டிசன்கள் மகேஷ் பட்டின் இந்தப் படத்தை வச்சு செய்துள்ளனர். மேலும் மகேஷ் பட்டின் சடக் 2 மிகக்குறைந்த ரேட்டிங்கை பெற்று உலக சாதனை படைத்ததாக தெரிகிறது. இந்த ரெக்கார்டை வரும் காலங்களில் யாராலும் பிரேக் பண்ண முடியாது என்றும் கிண்டலடித்துள்ளனர்.

சடக் 2 விமர்சனம்

சடக் 2 விமர்சனம்

சடக் 2 திரைப்பட விமர்சனம் என்று 2020 இன் மோசமான படங்களில் ஒன்று, இந்த பயணத்தை உங்கள் சொந்த ஆபத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் என விமர்சித்துள்ளனர்.

 கெடுத்து விட்டீர்கள்

கெடுத்து விட்டீர்கள்

மேலும் பிரபல திரைப்பட விமர்சகரான தரன் ஆதர்ஷும் சடக் 2 படத்திற்கு நெகட்டிவான விமர்சனத்தையே கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், சடக் 2 படத்தை அதன் முதல் பாகத்துடன் ஒப்பிட முடியாது... கதையே இல்லை... மந்தமான மற்றும் உயிரற்ற ஒரு திரைக்கதை... இசை கூட வேலை செய்யவில்லை.. சடக் பிராண்டையும் படத்தில் இடம்பெற்றுள்ள திறமைசாலிகளையும் கொடூரமாக வீணாக்கி விட்டீர்கள் என கூறியுள்ளார். படத்திற்கு ஒரு ஸ்டார் மட்டுமே கொடுத்துள்ள அவர், முடியவில்லை என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

சுஷாந்த் மரணம்

சுஷாந்த் மரணம்

சுஷாந்த் சிங் மரணத்திற்கு ஆலியா பட்டின் குடும்பமும் காரணம் என ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆலியா பட்டின் தந்தையான மகேஷ் பட், சுஷாந்தின் காதலியான ரியா சக்ரவர்த்தியுடன் நெருக்கமாக பழகினார். அவர்களின் போட்டோக்கள் வைரலான நிலையில் சுஷாந்த் மரணத்தால் அவர்கள் மீது ஏற்பட்ட வெறுப்பே சடக் 2 படத்தின் இந்த தோல்விக்கு காரணம் என கூறப்படுகிறது.

கரியை பூசி

கரியை பூசி

சஞ்சய் தத் புற்றுநோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் படத்தை ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்து தப்பித்துக் கொள்ளலாம் என படக்குழு திட்டமிட்டது. ஆனாலும் படத்தை கழுவி ஊற்றி அவர்களின் முகத்தில் கரியை பூசியுள்ளனர் ரசிகர்கள்.

More from Filmibeat

Read more about: sadak 2 சடக் 2
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X