சதக் 2 டிரெய்லர்.. இப்படி சதக்னு வெட்டிட்டாங்களே.. 24 மணி நேரத்தில் 5 மில்லியன் டிஸ்லைக்ஸ்!

சென்னை: ஆலியா பட்டின் நடிப்பில் வெளியாகியுள்ள சதக் 2 படத்தின் ட்ரெயிலர் 24 மணி நேரத்துக்குள் 5 மில்லியனுக்கு மேல் டிஸ்லைக்ஸை பெற்று மோசமான சாதனையை படைத்துள்ளது.

Recommended Video

'சடக் 2' திரைப்படத்தின் டிரைலர் விமர்சனம்

முகேஷ் பட்டின் விஷேஸ் ஃபிலிம்ஸ் பேனரில் தயாரிக்கப்படும் படம் சதக் 2. இந்தப் படத்தை பாலிவுட்டின் முக்கிய தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான மகேஷ் பட் இயக்கியுள்ளார்.

இதில் சஞ்சய் தத், பூஜா பட், ஆலியா பட் மற்றும் ஆதித்யா ராய் கபூர், குல்ஷன் குரோவர், மகரந்த் தேஷ்பாண்டே உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

24 மணிநேரத்திற்குள்

24 மணிநேரத்திற்குள்

இந்தப் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெயிலர் நேற்று வெளியானது. வெளியான ஒரு மணி நேரத்திற்குள்ளேயே ஒரு மில்லியனுக்கு மேல் டிஸ்லைக்குகளை குவித்தது இப்படம். இந்நிலையில் ட்ரெயிலர் ரிலீஸ் ஆகி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் 5 மில்லியனுக்கு மேல் டிஸ்லைக்குகளை குவித்துள்ளது.

ரியாவுடன் நெருக்கம்

ரியாவுடன் நெருக்கம்

சுஷாந்த் சிங் மரணத்திற்கு ஆலியா பட்டின் குடும்பமும் காரணம் என ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆலியா பட்டின் தந்தையான மகேஷ் பட், சுஷாந்தின் காதலியான ரியா சக்ரவர்த்தியுடன் நெருக்கமாக பழகினார். அவர்கள் இருவரும் தனிமையில் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வைரலானது.

கேங் அரசியல்

கேங் அரசியல்

ரியா சக்ரவர்த்தி சுஷாந்தை பிரிய மகேஷ் பட்டுடனான தொடர்புதான் காரணம் என்றும் ரசிகர்கள் குற்றம்சாட்டி வந்தனர். சுஷாந்த் மரணமடைந்த போதே, ஆலியா பட், சல்மான் கான், கரன் ஜோகர் உள்ளிட்டோரை கேங்க் அரசியல் செய்கிறார்கள் என கழுவி ஊற்றினர்.

பாதியாக குறைந்த ஃபாலோயர்ஸ்

பாதியாக குறைந்த ஃபாலோயர்ஸ்

மேலும் சமூக வலைதளங்களிலும் அவர்களை பின்தொடருவதையும் துண்டித்தனர் ரசிகர்கள். இதனால் அவர்களின் ஃபேன் ஃபாலோயர்களின் எண்ணிக்கை பாதிக்கும் கீழ் குறைந்தது. ஏற்கனவே சுஷாந்த் மரணத்திற்கு காரணமானவர்களை புறக்கணிப்போம் என பாலிவுட் ரசிகர்கள் கொதித்து போயுள்ளனர்.

மோசமான சாதனை

மோசமான சாதனை

இந்த நேரத்தில் பழம் போல் வந்து ரசிகர்கள் கையில் சிக்கியிருக்கிறது சதக் 2 ட்ரெயிலர். இதனை பயன்படுத்திக் கொள்ளும் சுஷாந்த் ரசிகர்கள், வெறித்தனமாக டிஸ்லைக்குகளை அள்ளிக் கொட்டி வருகின்றனர். உலகில் எந்தப் படமும் செய்யாத மிக மோசமான சாதனை இது என பாலிவுட் மீடியாக்கள் விமர்சித்து வருகின்றன.

விரட்ட வேண்டும்

விரட்ட வேண்டும்

பாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி நாட்டின் பிற பகுதியில் உள்ள ரசிகர்களும் சதக் 2 ட்ரெயிலரின் யூட்யூப் பக்கத்தில் மகேஷ் பட் குடும்பத்தின் மீது உள்ள கோபத்தை கமெண்ட்டுகளாக பதிவிட்டு வருகின்றனர். பாலிவுட் மாஃபியாக்களை மொத்தமாக புறக்கணித்து இந்தி திரைப்படத் துறையில் இருந்தே விரட்ட வேண்டும் என்றும் குரல் கொடுத்து வருகின்றனர்.

கழுவி ஊற்றும் ரசிகர்கள்

கழுவி ஊற்றும் ரசிகர்கள்

மேலும் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதனை வைத்து பிஸ்னஸ் பண்ண முயற்சிக்கும் ரத்தவெறி பிடித்த கூட்டம் மகேஷ் பட்டின் குடும்பம் என்றும் ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

அதிக டிஸ்லைக்குகள்

அதிக டிஸ்லைக்குகள்

ஓடிடியில் ரிலீஸாகும் இந்த படத்தையும் புறக்கணித்து தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படமான தில் பெச்சரா ட்ரெயிலர் ஒரு கோடிக்கும் மேல் லைக்ஸ்களை பெற்று அசத்தலான சாதனையை படைத்த நிலையில் பாலிவுட் வாரிசான ஆலியா பட்டின் சதக் 2 ட்ரெயிலர் டிஸ்லைக்குகளை பெற்று மோசமான சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதுதான் காரணம்

அதுதான் காரணம்

சதக் இப்படி ஒரு கேவலமான சாதனையை படைக்க மகேஷ் பட் மற்றும் ஆலியா பட் மீது ரசிகர்களுக்கு உள்ள கோபமே காரணம் என கூறப்படுகிறது. சுஷாந்த மரணமே சதக் 2 ட்ரெயிலரில் எதிரொலித்துள்ளது என்றும் பாலிவுட் வட்டாரங்கள் கூறி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X