கலிகாலம், தூங்க முடியல, இதயம் வலிக்குது: கொந்தளிக்கும் காயத்ரி ரகுராம், டிடி, ராதிகா
சென்னை: நெல்லையில் கந்து வட்டி கொடுமையால் தீக்குளித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானது குறித்து டிடி, ராதிகா, காயத்ரி ரகுராம் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
நெல்லையில் கந்து வட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்தனர். இதில் தாய், இரண்டு குழந்தைகள் பலியாகினர். கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து திரையுலக பிரபலங்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
வேதனை
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு குடும்பம் தீக்குளித்துள்ளது. தந்தையை தவிர தாயும், குழந்தைகளும் பலி. தீயை அணைக்க மண்ணை தவிர எதுவும் இல்லை. இதயம் வலிக்கிறது என்று ராதிகா சரத்குமார் ட்வீட்டியுள்ளார்.
தூக்கம்
அவர்கள் செய்யாத தவறுக்கு உயிருடன் எரிக்கப்பட்டுள்ளனர். அந்த குழந்தைகள் அடைந்த வேதனையை நினைத்தால் தூங்க முடியவில்லை. நாம் தினமும் தோற்கிறோம் என்கிறார் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி.
வருத்தம்
நெல்லையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்தது குறித்து ராதிகா போட்ட ட்வீட்டை பார்த்த காயத்ரி ரகுராம் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டினம்
பட்டப்பகலில் விசாகப்பட்டினத்தில் 23 வயது வாலிபர் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இந்த உலகம் எங்கே போகிறது? மக்கள் கடந்து சென்றுள்ளனர்- ஆட்டோ டிரைவர் அதை தடுக்காமல் வீடியோ எடுத்துள்ளார்.#Kaliyugam என்று கொந்தளித்துள்ளார் காயத்ரி.


Click it and Unblock the Notifications