சதா படம்: இயக்குனர், தயாரிப்பாளர் மோதல்நடிகர் மாதவன், நடிகை சதா நடித்த பிரியசகி படத்தை தயாரித்த தேனப்பனுக்கும் அதன் இயக்குனர்அதியமானுக்கும் இடையே மோதல் மூண்டுள்ளது.இது தொடர்பாக போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார் தேனப்பன். அதில்,பிரியசகி படத்தை ரூ. 4 கோடி செலவழித்து நான் தயாரித்தேன். படத்தின் டப்பிங் உரிமைதயாரிப்பாளருக்குத்தான் உள்ளது. இது எழுதப்படாத சட்டமாகும். இந்த வகையில் பிரியசகி படத்தின் டப்பிங்உரிமை எனக்குத்தான் உள்ளது.ஆனால் எனக்கு தெரியாமல் இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை இயக்குனர் அதியமான்வெங்கடேசுவரராவ் என்பவருக்கு விற்று விட்டதாக அறிகிறேன். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகிறேன்.இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை விசாரிக்குமாறு மத்திய குற்றப்பிரிவு புலனாய்வுபோலீசாரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் மாதவன், நடிகை சதா நடித்த பிரியசகி படத்தை தயாரித்த தேனப்பனுக்கும் அதன் இயக்குனர்அதியமானுக்கும் இடையே மோதல் மூண்டுள்ளது.
இது தொடர்பாக போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார் தேனப்பன். அதில்,
பிரியசகி படத்தை ரூ. 4 கோடி செலவழித்து நான் தயாரித்தேன். படத்தின் டப்பிங் உரிமைதயாரிப்பாளருக்குத்தான் உள்ளது. இது எழுதப்படாத சட்டமாகும். இந்த வகையில் பிரியசகி படத்தின் டப்பிங்உரிமை எனக்குத்தான் உள்ளது.
ஆனால் எனக்கு தெரியாமல் இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை இயக்குனர் அதியமான்வெங்கடேசுவரராவ் என்பவருக்கு விற்று விட்டதாக அறிகிறேன். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை விசாரிக்குமாறு மத்திய குற்றப்பிரிவு புலனாய்வுபோலீசாரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications