Don't Miss!
- News
"தமிழுக்கு வெறும் ரூ.23 கோடி.. ஆனால் சமஸ்கிருதத்திற்கு மட்டும் ரூ.643 கோடி" உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
- Sports
மகளிர் ஐபிஎல் - சென்னை மிஸ் ஆனது எப்படி தெரியுமா? யார் எவ்வளவு தொகை கேட்டாங்க
- Finance
கூகுள் ஊழியர்கள் சம்பளம் கட்.. சுந்தர் பிச்சை அடுத்த அதிரடி..!
- Lifestyle
உங்க முகம் எப்பவும் டல்லா இருக்கா? அப்ப பளபளப்பா ஜொலிக்க பீட்ருட்டை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்!
- Automobiles
பெட்ரோல் பைக் வச்சிருந்தா அத ஓரங்கட்டி வச்சிடுங்க.. இந்த இ-சைக்கிள்ல ஒரு கிமீ பயணிக்க வெறும் 5 பைசாதான் ஆகும்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
என்ன சொல்றீங்க.. ’காவி’ பிகினியா? சர்ச்சை கிளப்பிய நெட்டிசன்கள்.. ஷாருக்கானுக்கு வந்த சோதனை!
மும்பை: ஷாருக்கானின் பதான் படத்தின் 'பெஷாராம் ரங்' பாடல் வெளியாகி 21 மணி நேரத்தில் 17 மில்லியன் வியூஸ் கடந்து டிரெண்டாகி வருகிறது.
தீபிகா படுகோன் கவர்ச்சி நடிகைகளை எல்லாம் தாண்டி அப்படியொரு குலுக்கல் நடனம் போட்டு சர்வதேச அளவில் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளார்.
இந்நிலையில், பதான் பாடலில் காவி பிகினியை அணிந்து கொண்டு தீபிகா படுகோன் ஆடியிருப்பது இந்து மக்களை அவமதிக்கும் செயல் என பாய்காட் பதான் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
சரவெடியா
இருக்கே..
ஷாருக்கானின்
பதான்
டீசர்
ரிலீஸ்..
தீபிகா
படுகோன்
உச்ச
கட்ட
ஹாட்னஸ்
தான்
போங்க!

ஆபாச ஆட்டம்
ஹ்ரித்திக் ரோஷனின் வார் படத்தை இயக்கிய இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகி உள்ள பதான் படத்தின் பெஷாராம் ரங் பாடல் நேற்று வெளியானது. அந்த பாடலில் பிகினி உடைகளில் நடிகை தீபிகா படுகோன் ஆடியுள்ள கவர்ச்சி ஆட்டம் ஆபாச நடிகைகள் ஆடுவதை போல இருப்பதாகவும், சாஃப்ட் பார்னை பாலிவுட்டில் அறிமுகப்படுத்தியுள்ளனர் என நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

காவி பிகினி
கவர்ச்சியை குறைத்து நடித்து வந்த தீபிகா படுகோன் மீண்டும் கிளாமர் ரூட்டுக்கு கெஹ்ரியான் படம் மூலமே திரும்பி விட்டார். ஷாருக்கானின் பதான் படத்தில் இடம்பெற்றுள்ள பெஷாராம் பாடலில் அவர் காவி நிற பிகினியை அணிந்து கொண்டு கெட்ட ஆட்டம் போட்டிருப்பதை ஏகப்பட்ட இந்து அமைப்புகள் கண்டித்து வருகின்றன. பாய்காட் பாலிவுட் கேங் இந்த சர்ச்சையை தற்போது கையில் எடுத்து படத்தை தடை செய்ய வேண்டும் என கிளம்பி உள்ளது.

மத்த கலரு கண்ணுக்கு தெரியலையா
பிகினி என்பதை தாண்டி வித விதமான 'தாங்' உடைகளை அணிந்து கொண்டு உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை தீபிகா படுகோன் நடனமாடி உள்ளார். தங்க நிறம், மஞ்சள் நிறம், நீல நிறம் என பல வண்ணங்களில் பிகினி அணிந்து தீபிகா படுகோன் இந்த பாடலுக்கு நடனமாடி உள்ள நிலையில், திட்டமிட்டே ஷாருக்கான் படம் என்பதால் எதிர்ப்பு தெரிவிக்க 'காவி' சர்ச்சையை கிளப்புகின்றனர் என ஷாருக்கான் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

காவியும் பச்சையும்
தீபிகா
படுகோன்
காவி
நிற
பிகினி
அணிந்து
கவர்ச்சி
ஆட்டம்
போட
அவருடன்
படு
நெருக்கமாக
பச்சை
நிற
ஷர்ட்
அணிந்து
ஷாருக்கான்
ஆடியிருப்பது
மறைமுகமாக
பாகிஸ்தான்
கலரை
அவர்
குறியீடாக
வெளிக்காட்டுகிறார்
என
பாய்காட்
கேங்
பஞ்சாயத்தை
ஆரம்பித்துள்ளது.

சிக்கலில் ஷாருக்கான்
அமீர்கானின் லால் சிங் சத்தா படத்திற்கு பாய்காட் கேங் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், படம் தியேட்டர்களில் ஓடவே இல்லை. இதே நிலைமை வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ள ஷாருக்கானின் பதான் படத்திற்கு நிலவுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் இந்த பாடல் அமைந்துள்ளது என்றும் பெஷாராம் என பாடல் வரிகள் இடம்பெற்றிருப்பது இந்து மதக் கடவுளை அவமதிக்கும் செயல் என நெட்டிசன்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.