விஜயகாந்த் குடும்பத்தார் மாற்றி மாற்றி 'ஐடியா'.. ஓட்டம் பிடித்த சகாப்தம் இயக்குனர்!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இளை மகன் சண்முக பாண்டியன் நடித்து வரும் சகாப்தம் படத்தின் இயக்குனர் சந்தோஷ்குமார் ராஜன் கேப்டனின் தொல்லை தாங்க முடியாமல் படப்பிடிப்பில் இருந்து ஓட்டம் பிடித்துவிட்டாராம்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் அப்பா வழியில் ஹீரோவாகியுள்ளார். இந்த படத்தை புதுமுகமான சந்தோஷ்குமார் ராஜன் இயக்கி வந்தார்.
இந்நிலையில் படம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

குடும்பம்
சகாப்தம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்தது. விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா என்று குடும்பத்தார் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டனர்.

விஜயகாந்த்
பொள்ளாச்சியில் நடந்த படப்பிடிபப்பின்போது விஜயகாந்தும், அவரது மனைவியும் சேர்ந்து இயக்குனருக்கு ஏகப்பட்ட ஐடியாக்கள் கொடுத்து கதையை மாற்றுமாறு கூறினார்களாம்.

கடுப்பு
அனைத்து விஷயங்களிலும் விஜயகாந்த் தலையிடுவதால் இயக்குனர் கடுப்பில் இருந்திருக்கிறார். என்னடா முதல் படமே இவ்வளவு பிரச்சனையாக உள்ளதே என்று நொந்து போயிருந்திருக்கிறார்.

இயக்கம்
இத்தனை நாட்கள் ஐடியா கொடுத்து வந்த விஜயகாந்த் தற்போது இயக்குனரை டம்மியாக்கிவிட்டு அவரது வேலையை தன் கையில் எடுத்துக் கொண்டாராம்.

ஓட்டம்
விஜயகாந்தே இயக்குனர் வேலையை செய்கிறார், இனி எனக்கு இங்கு என்ன வேலை என்று நினைத்து சந்தோஷ் குமார் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஓட்டம் பிடித்துவிட்டாராம். இதையடுத்து வேறு ஒருவரை வைத்து படத்தை இயக்கப் போகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











