ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை: கலாய்த்த சானியா மிர்சா

By Siva

மும்பை: நடிகை சகாரிகா கட்கே, கிரிக்கெட் வீரர் ஜகீர் கான் தேனிலவின்போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.

பாலிவுட் நடிகை சகாரிகா கட்கேவும், கிரிக்கெட் வீரர் ஜகீர் கானும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் ஜோடியாக கோவிலுக்கு சென்று வந்தனர்.

தேனிலவுக்கு அவர்கள் மாலத்தீவுகளுக்கு சென்றுள்ளனர்.

ஜகீர்

படுக்கை அறையில் இருந்து கடலை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் சகாரிகா. முன்னதாக இது போன்று ஒரு நடிகை புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

ஹனிமூன்

ஜகீர் கான் தனியாக இருக்கும் புகைப்படத்தை சகாரிகா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதை பார்த்த டென்னிஸ் வீராங்கனை சானியாவோ, என்ன ஜகீர் தனியாக தேனிலவுக்கு போயிருக்கிறாரோ என்று கலாய்த்துள்ளார்.

டைவிங்

மாலத்தீவுகளில் கணவனும், மனைவியும் சேர்ந்து கடலில் டைவிங் சென்றதையும் புகைப்படம் எடுத்து சகாரிகா வெளியிட்டுள்ளார். இதே போன்று சகாரிகாவின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ஜகீர் கான்.

வரவேற்பு

ஜகீர், சகாரிகா திருமணம் எளிமையாக நடந்தது. அதன் பிறகு பிரமாண்ட திருமண வரவேற்பு நடைபெற்றது. அதில் கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X